High sugar fruits to avoid for diabetes: அன்றாட உணவில் நாம் சேர்க்கப்படும் சில உணவுகள் பானங்களில் பெரும்பாலும் சர்க்கரை காணப்படுகிறது. அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடல்பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதே சமயம், சில பழங்களிலும் சர்க்கரை இயற்கையாகவே காணப்படுகிறது. மேலும் சில பழங்கள் மற்றவற்றை விட மிகவும் இனிமையாக இருக்கும். இது உடலுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, நீரிழிவு நோய் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும்போது ஏற்படக்கூடிய ஒரு நாள்பட்ட நிலையாகும். எனவே இவர்கள் இயற்கையாகவே அதிக சர்க்கரை நிறைந்த பழங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிக சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். அதாவது சாக்லேட்டுகள், கேக்குகள் மற்றும் குக்கீகள் போன்ற உணவுகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். இதில் சில பழங்களையும் மிதமாக சாப்பிட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fruits For Weight Loss: எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த பழங்களை கட்டாயம் தவிர்க்கணும்
தவிர்க்க வேண்டிய அதிக சர்க்கரை உள்ள பழங்கள்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில ஆரோக்கியமான பழங்களைச் சாப்பிடுவது நன்மை தரும். ஊட்டச்சத்து, வளர்சிதை மாற்றம் மற்றும் இருதய நோய்கள் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல் செயல்பாடு மற்றும் பழ நுகர்வுக்கு, வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த இறப்பு அபாயத்திற்கும் இடையிலான தொடர்பு இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் அதிக சர்க்கரை உள்ள பழங்களைப் பொறுத்த வரை முக்கியமானது. இதில் நாம் தவிர்க்க அல்லது குறைவாக உட்கொள்ள வேண்டிய சில அதிக சர்க்கரை நிறைந்த பழங்களைக் காணலாம்.
மாம்பழம்
கோடைக்கால விருப்பமாக அமையும் பழமான மாம்பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம் சாப்பிடுவது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி, தோல் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. அதன் படி, நூறு கிராம் பழுத்த மாம்பழத்தில் 14 முதல் 15 கிராம் சர்க்கரை இருப்பதாகக் கூறப்படுகிறது.
லிச்சி பழங்கள்
தவிர்க்க வேண்டிய அல்லது மிதமாக சாப்பிட வேண்டிய அதிக சர்க்கரை நிறைந்த பழங்களில் ஒன்றாக லிச்சி பழம் அமைகிறது. நூறு கிராம் லிச்சி பழத்தில் 15.2 கிராம் சர்க்கரை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் வைட்டமின் சி, தாமிரம் மற்றும் பாலிபினால்கள் போன்றவை உள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
வாழைப்பழம்
அதிக சர்க்கரை கொண்ட பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் அமைகிறது. எனவே இதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாக சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இவை ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு பயணத்தில் இந்த பழங்கள் சாப்பிடவேக்கூடாது.!
திராட்சை
திராட்சைகளில் வைட்டமின்கள் சி, கே மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை இதயம், சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை பயக்கும். எனவே இரத்த சர்க்கரை அளவை கண்காணித்து வருபவர்கள், இதை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அரை கப் பச்சை திராட்சையை உட்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
அன்னாசிப்பழம்
குறைவாக உட்கொள்ள வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய அதிக சர்க்கரை நிறைந்த பழங்களில் அன்னாச்சிப்பழமும் ஒன்று. 100 கிராம் அளவிலான அன்னாச்சிப்பழத்தில் 10 முதல் 12 கிராம் சர்க்கரை உள்ளது. ஆனால், இதில் வைட்டமின் சி, ப்ரோமைலின் மற்றும் மாங்கனீசு போன்றவையும் உள்ளது. இவை செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
அத்திப்பழம்
புதிய அத்திப்பழங்களில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை இது செரிமானம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. நூறு கிராம் அத்திப்பழத்தில் 16.3 கிராம் சர்க்கரை இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே தவிர்க்க வேண்டிய அல்லது குறைவாக சாப்பிட வேண்டிய அதிக சர்க்கரை கொண்ட பழங்களில் ஒன்றாக அமைகிறது. எனவே ஒரு நடுத்தர அளவிலான அத்திப்பழத்தை மட்டும் சாப்பிடலாம்.
இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு இந்த பழங்களை நட்ஸ் அல்லது வெற்று தயிர் போன்ற புரதம் அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள இயற்கை சர்க்கரை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களுடன் இணைந்து ஆரோக்கியத்தைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes avoid fruits: உங்களுக்கு சுகர் லெவல் அதிகமா இருக்கா? அப்ப நீங்க மறந்தும் இந்த பழங்களை சாப்பிடாதீங்க
Image Source: Freepik