Black Cumin Tea Benefits: வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் கருஞ்சீரக டீ தயாரிக்கும் முறை மற்றும் குடிக்கும் முறை

  • SHARE
  • FOLLOW
Black Cumin Tea Benefits: வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் கருஞ்சீரக டீ தயாரிக்கும் முறை மற்றும் குடிக்கும் முறை


Black Cumin Tea For Weight Loss: உடல் எடை அதிகமாக இருப்பது இரத்த அழுத்தம், நீரிழிவு, மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவை அனைத்திற்கும் உடலில் அதிகளவு கொழுப்பு இருப்பதே காரணமாகும். உடலில் கொழுப்பு எதுவும் சேராமல் பாதுகாத்துக் கொள்வது உடல் பருமனை மட்டுமல்லாது மற்ற பிற விளைவுகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் எடையைக் குறைக்க உதவும் பல்வேறு முயற்சிகளில் இயற்கையான முறையான கருஞ்சீரகம் பெருமளவில் பயன்படுகிறது. கருஞ்சீரக டீயைப் பயன்படுத்தி உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதைக் காண்போம்.

உடல் எடை குறைய கருஞ்சீரகம்

தினமும் சிறிதளவு கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடலில் ஏற்படும் ஏராளமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. கருஞ்சீரகமானது உடலில் ஏற்படும் சரும பிரச்சனை, உடல் எடையைக் குறைப்பது, முடி உதிர்தலைத் தடுக்க, இதய நோய் வராமல் தடுக்க, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக கருஞ்சீரகம் பயன்படுகிறது. கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும், தொப்பையையும் குறைந்த கருஞ்சீரகத்தில் டீ தயாரித்துக் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips : இதை செய்தால் போதும் வெறும் 21 நாளில் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!

கருஞ்சீரக டீ

தினமும் ஒரு கப் கருஞ்சீரக டீ குடித்து வர, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கலாம். இப்போது கருஞ்சீரக டீ செய்யத் தேவையானவை மற்றும் தயாரிக்கும் முறைகள் குறித்துக் காணலாம்.

கருஞ்சீரக டீ செய்ய தேவையானவை

  • புதினா – 1 கைப்பிடியளவு
  • கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
  • தேன் – 2 ஸ்பூன்
  • இஞ்சி – 1 துண்டு

இந்த பதிவும் உதவலாம்: Walking After Eating: இரவு சாப்பிட்ட பின் வாக்கிங் செல்வது உடல் நலத்திற்கு நல்லதா?

கருஞ்சீரக டீ செய்முறை

கருஞ்சீரக டீயைத் தயாரிக்கும் முறைகள் குறித்து இதில் காணலாம்.

  • முதலில் அரை லிட்டர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • தண்ணீர் நன்கு கொதித்த பின்னர், அதில் கருஞ்சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
  • இவ்வாறு கொதிக்க வைக்கும் போது கருஞ்சீரகத்தின் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும்.
  • இஞ்சி மற்றும் கருஞ்சீரகம் இரண்டும் சேர்த்து கொதித்து வரும் போது சிறிதளவு புதினாவைச் சேர்க்கலாம்.
  • புதினா சேர்த்த பின் கொதிக்க வைக்கத் தேவையில்லை. புதினாவைச் சேர்த்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கருஞ்சீரக டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ தயாராகி விடும்.

இந்த பதிவும் உதவலாம்: Honey for Weight Loss: உடல் எடையை வேகமாகக் குறைக்க தேனை இப்படி சாப்பிடுங்க.

எப்போது கருஞ்சீரக டீ குடிக்கலாம்

மேற்கூறிய முறையில் தயார் செய்த கருஞ்சீரக டீயில் எலுமிச்சை பழச் சாறு சிறிதளவு சேர்த்து குடிக்கலாம்.

பொதுவாக டீ குடிக்கும் நேரங்களில் இந்த கருஞ்சீரக டீயை எடுத்துக் கொள்ளலாம். எனினும், காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரக டீ குடிப்பது உடல் எடையை வேகமாக குறைய உதவும். மேலும் காலை, மாலை அல்லது இரவு தூங்கும் நேரத்தில் கருஞ்சீரக டீ குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக கருஞ்சீரக டீ குடித்து வரும் சமயங்களில் பால் டீ, காபி குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Weight Gain: உடல் எடையை விரைவாக அதிகரிக்க எளிய வழிகள்!

Disclaimer