Honey for Weight Loss: உடல் எடையை வேகமாகக் குறைக்க தேனை இப்படி சாப்பிடுங்க.

  • SHARE
  • FOLLOW
Honey for Weight Loss: உடல் எடையை வேகமாகக் குறைக்க தேனை இப்படி சாப்பிடுங்க.


Honey for Weightloss: உடல் எடை அதிகரிப்பது மற்றும் குறைப்பது இரண்டிலுமே தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிப்பதன் மூலம், உடல் எடையைக் குறைக்க முடியும். இதற்கு தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளே காரணம் ஆகும். இவை, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

எடை இழப்புக்கு தேன் பயன்படுத்துவது எப்படி

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், நச்சுக்கள் போன்றவற்றை நீக்கி, உடல் எடை குறைய சில பொருள்களுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம். இதில், உடல் எடை இழப்புக்கு தேனை எந்தெந்த பொருள்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

தேன் மற்றும் எலுமிச்சை

தினந்தோறும் காலை நேரத்தில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து அருந்தும் போது உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் இது உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது. தேன் மற்றும் எலுமிச்சையுடன் துருவிய இஞ்சி சேர்த்து குடிப்பதன் மூலம் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

உடல் எடை குறைய தேனுடன் கிரீன் டீ

தேனுடன் கிரீன் டீ கலந்து குடிப்பதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். கிரீன் டீ மட்டும் தனித்து அருந்துவதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். இதைத் தேனுடன் கலந்து குடிப்பதன் மூலம் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Double Chin Reduce Tips: இரட்டைத் தாடை பிரச்சனை இருக்கா.? அப்ப நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!

உடல் எடை குறைய வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன்

வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து அருந்துவதன் மூலம், உடல் எடையைக் குறைக்க முடியும். ஒரு கிளாஸ் தண்ணீரை சூடு செய்து, பின் வெதுவெதுப்பான வெப்பநிலையில் வைத்து தேன் கலந்து சூடாக இருக்கும் போது குடிக்கவும். இதன் மூலம், உடல் எடை குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

இலவங்கப்பட்டை மற்றும் தேன்

இந்த இயற்கையான தீர்வைப் பயன்படுத்தி உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். மேலும், இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின், இலவங்கப்பட்டையில் கொதிக்கும் நீரை ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு, இலவங்கப்பட்டையை எடுத்து விட்டு, அந்த தண்ணீரில் தேன் கலந்து சூடாக குடிக்கவும். இதன் மூலம், உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

இவ்வாறு வெவ்வேறு முறைகளில் தேனைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம். இதற்கு தேனில் உள்ள சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களே காரணமாகும். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

Image Source: Freepik

Read Next

Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்