Doctor Verified

Weight Gain Tips: எவ்ளோ ஒல்லியாக இருந்தாலும் உடனே எடை அதிகரிக்க அரிசியை இப்படி சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Weight Gain Tips: எவ்ளோ ஒல்லியாக இருந்தாலும் உடனே எடை அதிகரிக்க அரிசியை இப்படி சாப்பிடுங்க

உடல் எடையை அதிகரிக்க உதவும் அரிசியை எந்தெந்த வழிகளில் எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காண்போம். மெல்லிய மற்றும் பலவீனமான உடலை, அதிக எடையுள்ளதாக மாற்ற ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டிஷியன் டாக்டர் சுகீதா முத்ரேஜா அவர்கள் அரிசியை எந்தெந்த வழிகளில் சாப்பிடலாம் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Gain: உடல் எடையை விரைவாக அதிகரிக்க எளிய வழிகள்!

உடல் எடை அதிகரிக்க அரிசியை எவ்வாறு எடுத்துக் கொள்வது

உடல் எடையை அதிகரிக்க அரிசி உதவுவதாக இருப்பினும், இதை ஆரோக்கியமான மற்றும் சரியான முறையில் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதற்கு அரிசியுடன் காய்கறிகள், பாலாடைக்கட்டி, மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றைக் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம் கலோரிகள், புரதங்கள் மற்றும் இன்னும் பிற வைட்டமின்கள் போன்றவற்றுடன் கார்போஹைட்ரேட்டுகளைப் பெறலாம்.

அரிசி கிச்சடி

கிச்சடி சாப்பிடுவது உடல் எடை குறைப்பு மற்றும் அதிகரிப்பு இரண்டிற்கும் உதவுகிறது. அரிசி கிச்சடி எடுத்துக்கொள்வது உடல் எடையைக் கூட்டுவதுடன், எளிதில் செரிமானம் அடையச் செய்யும். இந்த சூழ்நிலையில், கிச்சடி உண்ட பிறகு மேலும் பசியை உணரலாம்.

கிச்சடி செய்யும் போது அதில் அதிகளவு பருப்பு சேர்க்க வேண்டும். மேலும் எடை அதிகரிக்க கிச்சடியை ஊறுகாய், நெய், சாலட், ரைதா போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடலாம். கிச்சடி பிடிக்கவில்லை எனில், அரிசியை புலாவ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். எனினும் கிச்சடி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Gain Reasons: திடீரென்று உங்க உடல் எடை அதிகரித்துவிட்டதா? அப்போ இதுதான் காரணம்

அரிசி கீர்

அரிசி கீர் உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இவற்றைத் தயாரிக்க முழு கொழுப்பு கொண்ட பாலை பயன்படுத்தலாம். இதனுடன் பாதாம், திராட்சை, முந்திரி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி கீரில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் கிடைக்கிறது. எனவே உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் வாரத்திற்கு 3 முதல் 4 நாட்கள் வரை அரிசி கீரை எடுத்துக் கொள்ளலாம்.

பிரியாணி

இன்று அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் பிரியாணி முக்கியமான ஒன்றாகும். இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. பிரியாணியில் அதிக காய்கறிகள் சேர்க்கலாம். அதே சமயம் உடல் எடையை அதிகரிப்பதில் அசைவ பிரியாணி உதவுகிறது. எனவே உடல் எடையை அதிகரிக்க வீட்டிலேயே பிரியாணியை தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

பருப்பு மற்றும் அரிசி

உடல் எடையை அதிகரிக்க, தினமும் மதிய உணவில் அரிசியுடன் பருப்பு சேர்த்து சாப்பிடலாம். அரிசியுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து எடுத்துக் கொள்வது உடல் எடையை வேகமாக எடுத்துக் கொள்ள உதவும். பருப்பு மற்றும் அரிசியில் புரதம் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Gain Tips: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க இந்த 6 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

மீன் மற்றும் அரிசி

உடல் ஆரோக்கியத்திற்கு மீன் மற்றும் அரிசி இரண்டுமே நன்மை பயக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் சாதத்துடன் மீன் சேர்த்து சாப்பிடலாம். மீனில் உள்ள அமினோ அமிலம் 3, உடலில் கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக, சால்மன் மீன் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடை அதிகரிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு அரிசி சாப்பிடலாம்

உடல் எடையை அதிகரிக்க அரிசியை எந்தெந்த வழிகளில் எடுத்துக் கொள்வது என்பது குறித்து பார்த்தோம். ஆனால், எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் 1/3 அளவிலான கப் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் வெள்ளை அரிசியை விட, பழுப்பு அரிசி மிகவும் நன்மை தருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Gain Tips : நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடையை அதிகரிக்க பாதாமை இப்படி சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Intermittent Fasting Benefits: இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்ப இத தெரிஞ்சிக்கோங்க.

Disclaimer