Thu Oct 29, 2026 | 12:53 PM IST

Weight Gain Reasons: திடீரென்று உங்க உடல் எடை அதிகரித்துவிட்டதா? அப்போ இதுதான் காரணம்

Weight Gain Reasons: திடீரென்று உங்க உடல் எடை அதிகரித்துவிட்டதா? அப்போ இதுதான் காரணம்Weight Gain Reasons: திடீரென்று உங்க உடல் எடை அதிகரித்துவிட்டதா? அப்போ இதுதான் காரணம்

Surprising Reasons Of Weight Gain : உடல் எடையை குறைக்க சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். உடல் எடையை குறைக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, பொறுமையாக இருக்க வேண்டும். பல சமயங்களில் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் உடல் எடை குறைகிறது. ஆனால் திடீரென்று அவர்களின் எடை அதிகரிக்கிறது.

திடீர் எடை அதிகரிப்பு அவர்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, நீங்கள் அதன் காரணங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடை திடீரென அதிகரிப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். எனவே, வருத்தப்படுவதை விட்டு விட்டு, அதன் உண்மையான காரணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

சில சமயம் நாம் சரியான டயட்டில் இருந்து கொண்டு, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாலும், திடீரென எடை அதிகரித்திருந்தால், அதற்குப் பின்னால் சில தவறுகள் இருக்கலாம். அவை என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips : என்ன செய்தாலும் உடல் எடை குறையலையா? இதை ட்ரை பண்ணுங்க!

அதிக உப்பு உட்கொள்ளல்

உப்பை அதிகமாக உட்கொள்வது உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, உடல் எடையையும் அதிகரிக்கும். அதிகப்படியான உப்பை உட்கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் உடலில் நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கும்.

உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்

முந்தைய நாள் இரவு நீங்கள் கார்ப் நிறைந்த இரவு உணவை சாப்பிட்டிருந்தால் அல்லது கடந்த 1-2 நாட்களாக உங்கள் உணவில் வழக்கத்தை விட அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்டால், இது உங்கள் எடையையும் பாதிக்கும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, ​​​​கார்போஹைட்ரேட்டுகளின் அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்நிலையில், சரியான உணவை எடுத்துக் கொண்ட பிறகும், நீங்கள் கார்போஹைட்ரேட்டுகளின் அளவை அதிகரித்தால், அது எடையை பாதிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Gain Tips : நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடையை அதிகரிக்க பாதாமை இப்படி சாப்பிடுங்க

அஜீரணம்

ஒரு நாள் காலையில் நீங்கள் உங்கள் எடையை சரிபார்த்தீர்கள். அது தினசரியை விட அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் உங்கள் வயிறு சுத்தமாக இல்லை என்பதே காரணம். எப்போதும் வெறும் வயிற்றில் எடையை சரிபார்க்க வேண்டும். உங்கள் வயிறு சுத்தமாக இல்லாவிட்டால், நீங்கள் எடையை சரிபார்க்கிறீர்கள் என்றால், அது அதிகரிக்கும்.

மன அழுத்தம்

திடீர் எடை அதிகரிப்புக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் மக்கள் உடல் எடையை குறைக்க உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் தூக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை எடையை பாதிக்கின்றன. மன அழுத்தம் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது, இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். உங்கள் எடை இயல்பை விட அதிகமாக இருந்தால், நீங்கள் ஏதாவது மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

Image Credit:Freepik

Read Next

→ weight loss coffee : தொங்கும் தொப்பையை குறைக்க காஃபியை இப்படி செய்து குடிங்க.. நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.