Expert

weight loss coffee : தொங்கும் தொப்பையை குறைக்க காஃபியை இப்படி செய்து குடிங்க.. நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

  • SHARE
  • FOLLOW
weight loss coffee : தொங்கும் தொப்பையை குறைக்க காஃபியை இப்படி செய்து குடிங்க.. நல்ல ரிசல்ட் கிடைக்கும்!


Best Weight Loss Coffee: நீங்கள் ஒரு கப் காபியுடன் உங்கள் நாளை தொடங்குபவராக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. காபி உடலுக்கு ஆற்றலைத் தருவதுடன், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பெரும்பாலும் நம்மில் பலர் எடை இழப்புக்கு பல வகையான மருந்துகளுடன் பவுடர் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வோம்.

ஆனால், இதையெல்லாம் செய்தும் எதிர்பார்த்த பலன் நமக்கு கிடைப்பதில்லை. அப்படி நீங்கழும் உணர்ந்தால், எடை இழப்புக்கு காபியின் உதவியை நீங்கள் நாடலாம். காபியில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் எடையைக் குறைப்பதோடு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கின்றன. மேலும், காபி குடிப்பதால் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே

உடல் எடையை குறைக்க பாலுடன் காபி குடிப்பதற்கு பதிலாக இந்த 4 வகையான காபியை செய்து குடிக்கலாம். எடை இழப்புக்கு காபியை எப்படி செய்து குடிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை காஃபி

உடல் எடையை குறைக்க, பிளாக் காஃபியுடன் இலவங்கப்பட்டை சேர்த்து பருகலாம். இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த காபியை குடிப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும்.

லெமன் காஃபி

எடை இழப்புக்கு எலுமிச்சை காஃபி ஒரு சிறந்த வழி. இந்த காஃபி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இந்த காஃபியில் உள்ள கூறுகள், காஃபின், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை எடையைக் குறைக்க உதவுகின்றன. இந்த காபி வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. இந்த காபி செய்ய, கோப்பையில் 1 கப் காபியில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு போடவும். உங்கள் எலுமிச்சை காஃபி தயார்.

இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்க மாம்பழம் உதவுமா?

பிளாக் காஃபி

உடல் எடையை குறைக்க கருப்பு காஃபி குடிக்கலாம். பிளாக் காஃபி குடிப்பதால் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறைவதோடு தொப்பை குறையும். இந்த காஃபி ஆற்றலை அதிகரிப்பதோடு உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. அதன் சுவையை அதிகரிக்க, அதில் 1 சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்க்கவும்.

டார்க் சாக்லேட் காஃபி

பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க இந்த காஃபியை குடிக்க பயப்படுகிறார்கள். ஆனால், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன. இதன் காரணமாக எடை வேகமாக குறைகிறது. இந்த காபியை குடிப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, அதிகப்படியான உணவு உண்பதை தடுக்கிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

உடல் எடையை குறைக்க இந்த காபியை குடிக்கலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சினை இருந்தால், உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும்.

Image Credit- Freepik

Read Next

Weight Loss Drink: உடல் எடையை சட்டென குறைக்க இந்த மூலிகை டீயை பருகுங்கள்!

Disclaimer