Weight Loss Drink: உடல் எடையை சட்டென குறைக்க இந்த மூலிகை டீயை பருகுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Drink: உடல் எடையை சட்டென குறைக்க இந்த மூலிகை டீயை பருகுங்கள்!

அதுமட்டும் அல்ல, உடல் பருமன் பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், அதிக எடை கொண்டவர்கள், தங்கள் உடல் எடையை குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

நீங்களும் உடல் பருமனால் சிரமப்பட்டு, உடல் எடையை குறைக்க விரும்பினால், இலவங்கப்பட்டை, சீரகம் மற்றும் கொத்தமல்லியால் செய்ப்பட்ட மூலிகை டீயை பருகுங்கள். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம், கலோரிகள் மற்றும் கொழுப்பு குறையும். இதன் காரணமாக உங்கள் எடை குறைவது படிப்படியாக தொடங்குகிறது. இதை எப்படி யாஹ்யாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எடை இழப்புக்கு மூலிகை டீ நல்லதா?

  • இலவங்கப்பட்டையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது எடையை எளிமையாக குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அதாவது, சர்க்கரை நோயாளிகளின் எடையைக் குறைப்பதிலும் இலவங்கப்பட்டை நன்மை பயக்கும்.
  • சீரகத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இலவங்கப்பட்டையைப் போலவே, சீரகமும் எடையைக் குறைக்க உதவுகிறது. உண்மையில், சீரகம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்படுகிறது மற்றும் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். கூடுதலாக, சீரகம் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்கவும் சீரகம் உதவுகிறது. இது தவிர, சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், பசியின்மையும் கட்டுப்படுத்தப்படுகிறது, இது எடையைக் குறைக்க உதவுகிறது.
  • கொத்தமல்லி பற்றி நாம் பேசினால், அதன் நீர் எடை இழப்புக்கு நன்மை பயக்கும். கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இது எடை குறைக்க உதவுகிறது. கொத்தமல்லி நீர் வயிற்று வாயு மற்றும் அஜீரணத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க, நீங்கள் இலவங்கப்பட்டை, சீரகம் அல்லது கொத்தமல்லி கலந்த மூலிகை நீரை பருகலாம். இதனால் நீங்கள் விரைவான ரிசல்ட்டை பெறுவீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

மூலிகை டீ செய்வது எப்படி?

  • முதலில், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை, சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகளை போடவும்.
  • இவை அனைத்தையும் ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.
  • இந்த நீரை காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.
  • இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
  • இதை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் எடை குறையும்.

Image Credit: freepik

Read Next

Dinner Time: இரவு உணவு சாப்பிட சிறந்த நேரம் எது?

Disclaimer