ஓவர் உடல் பருமனை எவ்வாறு குறைப்பது என்ற கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதா?… உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை எண்ணி கவலைப்படுகிறீர்களா?… சரியான செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடலில் உறிஞ்சுவது எடையைக் குறைக்க மிக முக்கியமான விஷயமாகும்.
நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்களுடைய தினசரி உணவு முறையில் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களுடைய உடல் எடையை வேகமாக குறைவதை கண்கூடாக காண முடியும்.
அதுவும் குறிப்பிட்ட சில பழங்கள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. அவை என்ன என விரிவாக அறிந்து கொள்ளலாம்..
ஆப்பிள்:
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புவோருக்கு ஆப்பிள் ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் இதில் கலோரிகள் மிகவும் குறைவு, மேலும் இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை எளிதாக்குவதோடு, பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, நம் பசியை நீண்ட நேரம் தடுக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கலாம். அவை நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டால் கலோரிகள் குறைவு. அதுமட்டுமின்றி ஆப்பிள் காலை அல்லது இரவு உணவாக எடுத்துக்கொள்ள சிறந்தது.
ஸ்ட்ராபெர்ரி:
ஆப்பிளைப் போலவே நமக்குத் தேவைப்படும் மற்றொரு பழம் ஸ்ட்ராபெர்ரி. ஸ்ட்ராபெர்ரிகள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை தொப்பை மற்றும் எடையை குறைக்க உதவும். தினமும் ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொள்வதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்ததாக மாற்ற முடியும்.
இதையும் படிங்க:
இது நமது செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஸ்ட்ராபெர்ரிகள் கலோரிகள் அதிகமாக உடலில் சேராமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. இதை சாலட்களின் ஒரு பகுதியாக சாப்பிடலாம் அல்லது ஜூஸாக உட்கொள்ளலாம். எப்படியிருந்தாலும், இவை உணவை சிறப்பாக்க உதவும்.
ஆரஞ்சு:
இன்று முதல் ஆரஞ்சுகளை உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பியுங்கள். ஆரஞ்சு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தின் களஞ்சியமாகும். இவை இரண்டும் நமது செரிமானத்திற்கு நல்லது மற்றூம் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும்.
மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள இயற்கையான இனிப்புச்சுவை, உங்களுக்கு சர்க்கரை மீது ஏற்படக்கூடிய ஆசையை கட்டுப்படுத்தவும் உதவும். இதனால் நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நமது அதிகப்படியான பசியையும் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் எடையையும் குறைக்கலாம்.