$
உடல் எடையை குறைக்க வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சி, டையட் என அனைத்தையும் முயற்சித்து பார்த்துவிட்டேன் ஒன்றுமே ஒர்க்அவுட் ஆகவில்லை என வருத்தப்படுகிறவர்கள், உங்கள் வீட்டு சமையலறையில் கிடைக்கூடிய சாதாரண பொருளை வைத்தே உடல் எடையை குறைப்பது எப்படி என அறிந்து கொள்ளுங்கள்…
இந்திய மசாலா வகைகளில் தவிர்க்க முடியாத பொருளாக உள்ள சோம்பு எனப்படும் பெருஞ்சீரகம், அதிக ஊட்டச்சத்து கொண்டது. பெருஞ்சீரகத்தில் கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக சோம்பை தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைவதில் கண்கூடாக மாற்றங்களை காணலாம் என்கின்றனர் நிபுணர்கள். அதனால் தான் சுவைக்காக மட்டுமின்றி, மருத்துவ குணத்திற்காகவும் சோம்பு, ஐஸ்கிரீம், மவுத் ஃப்ரெஷ்னர்கள் மற்றும் பேஸ்ட் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பை கீழே குறிப்பிட்டுள்ளது போல் தினசரி எடுத்துக்கொண்டால் உடல் எடையை குறையக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?… இதோ அதற்கான சில வழிமுறைகளே நாங்களே கொண்டு வந்துள்ளோம்…
பெருஞ்சீரக தண்ணீர்:
பெருஞ்சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி தினந்தோறும் பெருஞ்சீரக தண்ணீரை பருகி வந்தால் வயிற்றில் ஏற்படக்கூடிய அஜீரணம், வாயுத்தொல்லை, செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. மேலும் பெருஞ்சீரக தண்ணீரை பருகுவது, உடலின் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. பெருஞ்சீரக விதைகளை ஊறவைத்த தண்ணீரை தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு விரைவாக குறையக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: Black Coffee for Weight Loss: தினமும் ஒரு டம்ளர் பிளாக் காபி! தொப்பைக் கொழுப்பு முழுவதும் காலி!
உலர்ந்த சோம்பு:
பெருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை பருகுதுவது சிறிது கஷ்டமாக இருந்தால், நீங்கள் இந்த ஈசியான முறையை முயற்சித்து பார்க்கலாம். நன்கு உலர வைத்த பெருஞ்சீரகத்தை மிக்ஸில் போட்டு பொடியாக்கி கொள்ளுங்கள். இந்த பொடியுடன் உப்பு, மிளகுதூள் சேர்த்து சுடு சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இல்லையெல் தினமும் நீங்கள் சமைக்கும் குழம்பு, பொரியல் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரக பவுடரை கலந்து கொள்ளலாம். மூன்றாவதாக உணவிற்கு பிறகு பெருஞ்சீரக பவுடரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகுவதும் நல்ல பலன் தரும்.
இது வாயு, பெருங்குடல் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. சோம்பில் உள்ள எஸ்ட்ராகோல், ஃபென்சோன் மற்றும் அனெத்தோல் ஆகியவை செரிமானத்திற்கும், இரைப்பை நொதிகள் முறையாக சுரக்கவும் உதவுகிறது.
பெருஞ்சீரக தேநீர் (சோம்பு டீ):
இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான பானத்தில் தேநீருக்கு எப்போதுமே தனி இடம். பெரும்பாலானோருக்கு காலைப்பொழுது ஒரு கோப்பை தேநீர் இல்லாமல் விடியாது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் வழக்கமான தேநீருக்கு பதிலாக, சோம்பு டீயை முயற்சித்து பார்க்கலாம்.
செய்முறை:
கொதிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு பெருஞ்சீரகத்தை சேர்க்கவும். அத்துடன் அரை தேக்கரண்டி அளவிற்கு வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இந்த கலவையை வடிகட்டினால், வழக்கமாக பால் கலந்த தேநீருக்கு சிறிதளவும் குறைவில்லாத சுவையுடன் கூடிய சோம்பு டீ தயார். உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் இதனை பருகி வர நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
வறுத்த சோம்பு விதைகள்:
ஒரு தேக்கரண்டி சோம்பு விதைகளை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். இதன் மூலம் சோம்பிற்கு கூடுதல் சுவையும், மணமும் கிடைக்கிறது. தினந்தோறும் உணவிற்கு பிறகு ஒரு ஸ்பூன் வறுத்த சோம்புவை வாயில் போட்டு மென்று தின்பது செரிமானத்தை சீராக்கவும், தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Curd for Weight Loss: எகிறும் உடல் எடையை வேகமா குறைக்கும் தயிர்! எப்படி தெரியுமா?
Image Source: Freepik