How Much Water Should We Drink For Weight Loss: ஊட்டச்சத்து நிபுணர்கள் முதல் ஆயுர்வேத நிபுணர்கள் வரை அனைவரும் குடிநீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என நமக்கு காலம் காலமாக கூறி வந்தாலும், நம்மில் பலர் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதே இல்லை. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், அது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் பல நோய்களின் அபாயமும் குறைகிறது. தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேறும்.
இது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். தண்ணீர் குடிப்பதாலும் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உடலின் கலோரிகளை எரிக்க உதவும். ஆனால், உடல் எடையை குறைக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதியை கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதை பற்றி, பிர்லா ஆயுர்வேத (ஆயுர்வேத சிகிச்சை மையம்) ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ம்ருனல் கோலேயிடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்கள் இங்கே_
இந்த பதிவும் உதவலாம் : Lose Fat Naturally: கட கடன்னு உடல் எடையை குறைக்க எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்க!
எடை இழப்புக்கு தண்ணீர் எப்படி உதவுகிறது?
ஆயுர்வேத வல்லுநர்கள் தண்ணீர் குடிப்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்கின்றனர். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதனால், நோய்கள் ஏற்படும் ஆபத்து குறையும்.
ஆனால், எடை இழப்புக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் உடலின் தேவைகளைப் பொறுத்தது. இது தவிர, உடலின் குறைபாடுகள், உடல் செயல்பாடு மற்றும் தாகம் ஆகியவற்றைப் பொறுத்து நீரின் அளவைப் பராமரிக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க தண்ணீரை எப்படி குடிக்கணும்?

வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும்
ஆயுர்வேதத்தின்படி, உடல் எடையை குறைக்க குளிர்ந்த நீரை குடிக்கக் கூடாது. ஏனெனில், இது வயிற்றில் உள்ள தீயை அடக்கி, உடல் எடையை குறைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதற்குப் பதிலாக வெதுவெதுப்பான நீர் அல்லது வெந்நீர் அருந்தலாம். இது வயிற்றில் தீயை அதிகரித்து கலோரிகளை எரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Fruit Vs Fruit Juice: சட்டுன்னு உடல் எடையை குறைக்க ஃபுரூட் ஜூஸ் அல்லது பழம் சாப்பிடுவது நல்லதா?
சிப் பை சிப் ஆக குடிக்கவும்

ஆயுர்வேதத்தின் படி, ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சிப் பை சிப் குடிக்கவும். ஏனெனில், இது உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கிறது. மேலும், இது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே, ஒரே நேரத்தில் பல கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, சிறிது சிறிதாக தண்ணீரைக் குடிக்கவும்.
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கவும்
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால், அதிக கலோரிகளை உட்கொள்ள முடியாது. இது செரிமானத்தை விரைவுபடுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இது பசியை கட்டுப்படுத்துகிறது மற்றும் நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டாம். ஆயுர்வேதத்தின் படி, நீங்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பவராக இருந்தால், சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Food: உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்!
உடலின் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்

உங்கள் உடலின் தேவைக்கேற்ப தண்ணீரை குடிக்க வேண்டும். ஆயுர்வேதத்தின்படி, ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு முக்கியம். ஆனால், உங்கள் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டால், நீங்கள் அதிக தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
எடை குறைய எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஆயுர்வேதத்தின் படி, தண்ணீர் மட்டும் குடிப்பதால் உடல் எடையை குறைக்க முடியாது. இதற்கு டயட் மற்றும் வொர்க்அவுட்டை பின்பற்றுவதும் முக்கியம். நாள் முழுவதும் குறைந்தது 2 லிட்டர், அதாவது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது தினசரி நீரேற்றத்தை பராமரிக்கும். மேலும், இதன் மூலம் நீங்கள் கூடுதல் கலோரிகளை உட்கொள்ள மாட்டீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கு ஏற்றவாறு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.
Pic Courtesy: Freepik