Thu Oct 29, 2026 | 12:55 PM IST

Weight Loss Tips : உடல் எடையை சட்டுனு குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க!

Weight Loss Tips : உடல் எடையை சட்டுனு குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க!Weight Loss Tips : உடல் எடையை சட்டுனு குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க!

Does masoor dal help in weight loss : இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று. அதிக எடை உடலில் பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். பல நேரங்களில் மக்கள் உடல் எடையை குறைக்க ஜிம்மில் பல மணிநேரம் வியர்வையுடன் உணவுக் கட்டுப்பாட்டையும் செய்கிறார்கள். ஆனால், அதற்கான சரியான பலனை அவர்கள் பெறுவதில்லை.

உடல் எடையை குறைக்க பெரும்பாலும், லேசான மற்றும் சுவையற்ற உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், எடை இழப்புக்கு ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பருப்பில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இதனை உட்கொள்வதால், உடல் வலிமையுடன், பலவீனமும் நீங்கும்.

மேலும், பருப்பு இலகுவாக ஜீரணமாகக்கூடியது மட்டுமின்றி, உடலை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. இதில், காணப்படும் நார்ச்சத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது. பருப்பு எடையைக் குறைப்பதோடு, தொப்பையையும் குறைக்கிறது. உடல் எடையை குறைக்க மசூர் பருப்பை எப்படி சாப்பிடுவது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

மசூர் அல்லது சிவப்பு பருப்பு

மைசூர் (அ) மசூர்ப் பருப்பு என அழைக்கப்டும் சிவப்பு பருப்பு ஊட்டச்சத்து நிறைந்த பருப்புகளில் ஒன்று. இதை முதலில், மசூர் பருப்பை நன்கு சுத்தம் செய்து, பிரஷர் குக்கரில் 1 கப் பருப்புக்கு 1.5 கப் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 விசில் வைத்து வேகவைக்கவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெயில் சீரகம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பருப்பு கலவையை அதில் சேர்க்கவும். இதை ரொட்டி அல்லது பரோட்டாவுடன் சாப்பிடலாம்.

மசூர் தால் கிச்சடி

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மசூர் பருப்பை தால் கிச்சடி வடிவில் சாப்பிடலாம். மசூர் பருப்பு கிச்சடி சத்தானது மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதை செய்ய, பருப்பு, சிறிது அரிசி மற்றும் சில பச்சை காய்கறிகளை கலந்து பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். இந்த கிச்சடி எளிதில் ஜீரணிக்கக்கூடியதாக இருப்பதைத் தவிர, சுவையாகவும் இருக்கும். இதை மதிய உணவிற்கு செய்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம் : வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே

மசூர் பருப்பு சூப்

உடல் எடையை குறைப்பதோடு தொப்பையையும் குறைக்க விரும்பினால், மசூர் தால் சூப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மசூர் பருப்பு சூப் செய்ய, பிரஷர் குக்கரில் கீரை மற்றும் மசூர் பருப்பை நன்றாக சமைக்கவும். இப்போது, கடாயில் சிறிது தட்காவை வைத்து சிறிது நேரம் கிளறவும். இந்த சூப் சுவையாக இருப்பதைத் தவிர, உடலில் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கிறது.

மசூர் தால் அடை

சில நேரங்களில், உடல் எடையை குறைக்க, நீங்கள் மிகவும் சலிப்பான உணவை சாப்பிட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உணவை சுவையாக மாற்ற மசூர் தால் அடை செய்யலாம். மசூர் தாள் அடை செய்ய, மசூர் பருப்பை இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின்னர், காலையில் அரைத்து மாவு செய்யவும். இப்போது அதனுடன் மசாலாவை சேர்த்து, இந்த மாவை ஒரு தோசைக் கல்லில் ஊற்றவும். உங்கள் மசூர் தால் அடை தயார். தேவைப்பட்டால் காய்கறிகளை சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

எடையைக் குறைக்க மசூர் பருப்பை இந்த வழிகளில் உட்கொள்ளலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், அதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும்.

Image Credit- Freepik

Read Next

→ Apple Cider Vinegar: எடை இழப்புக்கு ஆப்பிள் சைடர் வினிகர் உதவுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.