Weight Loss After Marriage: கல்யாணத்துக்கு அப்றம் உடல் எடை சட்டுனு ஏறிடுச்சா? இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Weight Loss After Marriage: கல்யாணத்துக்கு அப்றம் உடல் எடை சட்டுனு ஏறிடுச்சா? இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க

இது குறித்து இந்தியாவின் குடும்ப மருத்துவர் டாக்டர் ராமன் குமார் அவர்கள் கூறியுள்ளதாவது, “திருமணத்திற்குப் பிறகு, பெண்ணின் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்கள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், உடல் உறவுகளின் தொடக்கம், வளர்ச்சிதை மாற்றத்தில் மாற்றங்கள், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் பெண்களின் எடை அதிகரிக்கத் தொடங்கலாம். இதற்கு சில குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். இதில் திருமணத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க சில பயனுள்ள வழிகளைப் பின்பற்றலாம்” எனக் கூறியுள்ளார். இந்த பதிவில் திருமணத்திற்குப் பின் எடையைக் குறைக்க உதவும் வழிகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Low Calorie Breakfast: உடல் எடையை சட்டுனு குறைக்க காலை உணவாக இவற்றை சாப்பிடுங்க!

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் உடல் எடையைக் குறைக்க வழிகள்

உணவைத் திட்டமிடுதல்

ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவதைப் போலவே, உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் திட்டமிட வேண்டும். அதிகமாக சாப்பிடுவதையோ, ஆரோக்கியமற்றதை சாப்பிடுவதையோ இதன் மூலம் தவிர்க்க முடியும். மேலும் இது கவனத்துடன் சாப்பிட உதவுவதுடன், எடையை விரைவாகக் குறைக்கும்.

உணவில் புரதத்தைச் சேர்த்தல்

முழு உடலுக்கும் புரதம் இன்றியமையாததாக கருதப்படுகிறது. எனவே, உணவில் போதுமான புரதத்தை எடுத்துக் கொள்ளும் போது நீண்ட நேரம் பசி உணர்வைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் அடுத்த உணவில் குறைவான கலோரிகளை எடுக்க திட்டமிடுவோம். இது உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது. மேலும் சுறுசுறுப்பாக உணர வைக்கிறது. அதன் படி, உணவில் முட்டை, சோயா, சீஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களைத் தேர்ந்தெடுப்பது

பல நேரங்களில் மக்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சேமித்து வைப்பதால், உடல் எடையைக் குறைக்க முடியாது. இந்த சூழ்நிலையில் இவர்கள் விருப்பமில்லாமல் சாப்பிடத் தொடங்குகின்றனர். இது எடை அதிகரிக்க வழிவகுக்கலாம். எனவே வீட்டிலேயே ஆரோக்கியமான தின்பண்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவின் மீதான நாட்டத்தைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Fruits: இந்த சம்மர்ல வேகமாக எடையை குறைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

வெளியிலும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது

வெளியில் சென்று சாப்பிடும் போதும், அதிக வறுத்த உணவுகள் அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடல் எடை குறைவதைத் தடுக்கலாம். இதற்கு முன்கூட்டியே நாளை உண்ணும் உணவைத் திட்டமிடுவது, ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுகிறது.

உடற்பயிற்சிக்கு நேரம் அளிப்பது

திருமணத்திற்குப் பின் அனைவரின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காமல், உடல் உழைப்பும் குறைவாக இருப்பதால் எடை அதிகரிக்கத் தொடங்கலாம். எனவே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பது நல்லது.

இந்த வகை தேர்வுகளின் மூலம் பெண்கள் திருமணத்திற்குப் பின் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனுடன், ஒரு உணவு நிபுணரின் உதவியுடன் உணவுத் திட்டத்தையும் தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Grapes என்ன சாப்பிட்டாலும் வெயிட் குறையலயா? உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Belly Fat: பிடிவாதமான தொப்பை கொழுப்பை கரைக்க உதவும் 4 உணவுகள்!

Disclaimer