Sat Sep 12, 2026 | 12:58 AM IST

Walking Benefits: தினமும் காலையில் வாக்கிங் செல்பவரா நீங்க? இதை கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்க!

What To Do Before Going For Morning Walk: நம்மில் பலருக்கு காலையில் குறைந்தது 20 நிமிடங்களாவது வாக்கிங் செல்லும் பழக்கம் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளைத் தவிர்க்க நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

நாம் என்ன செய்தாலும் அதன் முழுமையான பலனை பெற செய்யும் விஷயங்களை சரியாக செய்ய வேண்டியது அவசியம். நடைப்பயிற்சிக்குச் செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்று வெகு சிலருக்குத் தெரியும். காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் முழுப் பலனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Walking Mistakes: வாக்கிங் செல்லும் போது மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க!!

காலையில் வாக்கிங் செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை

வெந்நீர் குடிக்கவும்

தினமும் காலை நடைப்பயிற்சிக்கு செல்லும் முன் வெந்நீர் குடிக்கவும். குறிப்பாக குளிர்காலத்தில், வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் காலையில் இளநீரை காலையில் குடித்தால், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குளிர்ச்சியான நீரை குடித்தால், உங்கள் தொப்பை கொழுப்பை அதிகரிக்கும். மேலும், இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது.

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்கும். நடைபயிற்சிக்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கலாம். மேலும், நீங்கள் ஆற்றலுடனும் இருப்பீர்கள். இது தவிர, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் பின் ஏற்படும் தசை விறைப்புத்தன்மையை நீக்குவதற்கும் வெதுவெதுப்பான நீர் பயனுள்ளதாக இருக்கும். நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் உங்கள் சருமத்தை மேம்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Food After Walking: காலையில் வாக்கிங் செல்பவரா நீங்க? வாக்கிங்கு பின் என்ன சாப்பிடணும்?

வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்

நீங்கள் காலையில் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய விரும்பினால், அதற்கு முன் வயிற்றை சுத்தம் செய்யுங்கள். நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதற்கு முன் மலம் கழித்தால், நீங்கள் இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் உணருவீர்கள். காலையில் மலம் கழிக்காமல் வாக்கிங் சென்றால் நீரிழப்பு காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

குடல் இயக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவும். வழக்கமான குடல் இயக்கம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினசரி நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்கு முன் வழக்கமான குடல் அசைவுகளைக் கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Christmas Gift Ideas: கிறிஸ்துமஸ் வந்தாச்சு! கிஃப்ட் வாங்கலையா.? ஐடியா இதோ..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content