Sat Sep 12, 2026 | 12:09 AM IST

Morning Walk Tips: தினமும் காலையில் இப்படி வாக்கிங் போங்க.. ஜாக்கிங் சென்றதற்கான பலன் கிடைக்கும்!

Best Time to go for a Walking: ஆரோக்கியமாக இருக்க, நாம் எப்போதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடல் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், எல்லா மக்களும் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யவோ அல்லது யோகா பயிற்சி செய்யவோ முடியாது.

எனவே, பெரும்பாலான மக்கள் காலையில் நடக்க அல்லது ஜாக் செய்ய விரும்புகிறார்கள். காலையில் வேகமான ஜாகிங் அல்லது நடைபயிற்சி செய்வது ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். இது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் நடப்பது அல்லது வெறும் 30 நிமிட காலை நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Walking Benefits: நடந்தா உடம்பு குறையுமா? அப்போ எவ்வளவு நேரம் நடக்கனும்.!

ஆனால், காலையில் வாக்கிங் செல்ல சிறந்த நேரம் எது என்று மக்கள் அடிக்கடி குழப்பமடைகிறார்கள்? காலை நடைப்பயணத்தின் அதிகபட்ச பலனைப் பெற ஒருவர் காலையில் எந்த நேரத்தில் நடக்க வேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காலையில் வாக்கிங் செல்வதன் பயன்கள் என்ன?

காலை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். இது பல தீவிர நோய்களில் இருந்து நம்மை விலக்கி வைக்க உதவுகிறது. தினமும் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்…

  • மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
  • இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது
  • பிபி கட்டுக்குள் இருக்கும்
  • இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
  • நீரிழிவு நோயின் ஆபத்து குறைகிறது
  • மூட்டு மற்றும் தசை வலி குறைகிறது
  • நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது
  • உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது
  • இரவில் நன்றாக தூக்கம் வரும்

இந்த பதிவும் உதவலாம் : Neck Pain: தீராத கழுத்து வலியால் அவதியா? இந்த 6 உடற்பயிற்சியை செய்யுங்க!

காலையில் வாக்கிங் செல்ல எந்த நேரம் சிறந்தது?

இரவில் சுற்றுச்சூழலில் அதிக மாசு ஏற்படுகிறது. காலை நேரத்தில் மாசு அளவு மிகவும் குறைவாக இருப்பதால், காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. அதே நேரத்தில், மதிய நேரத்தில் மிகவும் தீவிரமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்கவும். அதே போல, மாலை நேரமும் வாக்கிங் செல்ல சிறந்த நேரம். அந்த நேரத்தில் மாசு அளவு சாதாரணமாக இருக்கும்.

ஆனால், மக்கள் பெரும்பாலும் காலையில் நடக்க விரும்புவார்கள். நீங்களும் காலை நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சூரிய உதயத்திற்குப் பிறகு காலை 8 மணி வரை காலை நடைபயிற்சிக்கு சிறந்த நேரம். இருப்பினும், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரமும் வாக்கிங் செல்ல நல்லதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சூரிய ஒளியை எடுக்க இதுவே சிறந்த நேரமாகும்.

Pic Courtesy: Freepik

Read Next

Morning Vs Evening Walk: உடல் எடையை குறைக்க மார்னிங் வாக்கிங் செல்வது நல்லதா? மாலையில் நடப்பது நல்லதா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content