Prolonged Sitting Effects: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களா நீங்க? இந்த பிரச்சனையை சந்திக்க தயாராகிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Prolonged Sitting Effects: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களா நீங்க? இந்த பிரச்சனையை சந்திக்க தயாராகிக்கோங்க


What Happens When You Sit For Long Hours: இன்று பெரும்பாலனோர்கள் மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், ஒருவர் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து 8 முதல் 9 மணி நேரம் வரை உட்கார்ந்து வேலை பார்க்கக்கூடிய அமைப்பில் உள்ளனர்.

உடலை செயல்படுத்தி செய்யும் வேலைகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உட்கார்ந்து வேலை பார்ப்பது தவறு கிடையாது. ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது ஆபத்தானதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Person: அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏன் வழக்கமாக்க வேண்டும் தெரியுமா?

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் விளைவுகள்

உடல் எடை அதிகரிப்பு

உடல் செயல்பாட்டில் ஈடுபட்டு வேலை செய்வது லிப்போபுரோட்டீன் லிபேஸ் என்ற மூலக்கூறுகளை வெளியிடுகிறது. இந்த மூலக்கூறுகள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரைகளை செயலாக்க உதவுகிறது. ஆனால், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இந்த லிப்போபுரோட்டீன் லிபேஸ் மூலக்கூறுகளின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, கீழ் முதுகு பகுதியில் கொழுப்பு அதிகம் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைவது உடல் எடை அதிகரிப்பு ஆகும். அதாவது, உடலில் இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாத போது நீரிழிவு நோய் ஏற்படும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதன் படி, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதய பாதிப்பு

நீரிழிவு நோயைத் தவிர, உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களில் இதய பாதிப்பும் அடங்கும். அதாவது நீண்ட நேரம் உட்காருவதால் இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம். மெடிசின் அண்ட் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்ஸர்சைஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், 23 மணி நேரத்திற்கும் மேலாக தொலைக்காட்சி முன் அமர்ந்திருப்பவர்கள் இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Oil: கொளுத்தும் வெயிலில் உடம்பு சூட்டைத் தணிக்க இந்த 6 எண்ணெய் போதும்

ஆழமான நரம்பு இரத்த உறைவு

ஆழமான நரம்பு இரத்த உறைவு அதாவது டீப் வெயின் த்ரோம்போசிஸ் (DVT) என்பது ஒரு வகையான இரத்த உறைவு ஆகும். இது பெரும்பாலும் கால்களை பாதிக்கும் ஒரு நிலையாகும். இந்த உறைவு உடையும் போது, உடலின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு நுரையீரல் அடைப்பு ஏற்படலாம். சில சமயங்களில் இந்த பாதிப்பால் மரணம் கூட நிகழும்.

பலவீனமான கால்கள்

நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பது கீழ் உடலில் உள்ள சக்தி வாய்ந்த தசைகளை பலவீனமாக்கலாம். இவை தசைகளைக் குறைத்து தசைச் சிதைவுக்கு வழிவகுக்கலாம். இது தசை திசு மெலிந்து அல்லது இழப்பதால் ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும். இதில் நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பது நிலையை மோசமாக்கலாம். இந்த நிலையில் கால்கள் பலவீனமாகி, காயத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

மனநலப் பிரச்சனைகள்

நீண்ட நேரம் அல்லது நாள் முழுவதும் உட்கார்ந்த வாழ்க்கை முறை உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பதுடன், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்ற திரையின் முன் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கவலையை அதிகரித்து, தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Oil Pulling: கோடையில் ஆயில் புல்லிங் செய்ய எந்த என்னை சிறந்தது? நிபுணர்கள் பதில் இங்கே!

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க செய்ய வேண்டியவை

  • நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்காரும் நிலை ஏற்படின், அவ்வப்போது சிறு இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது. அதாவது, நடைபயிற்சி அல்லது வேறு சில உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
  • உட்காருவதற்கு ஏற்ற வசதியான நாற்காலியைத் தேர்வு செய்ய வேண்டும். இது சரியான உயரத்தைக் கொண்டிருக்குமாறும், முதுகு சரியாக ஆதரிக்கும் வகையிலும் இருக்கும்.
  • இடைவெளி எடுக்க முடியாவிடில், நாற்காலியில் அமர்ந்த படி சில நீட்சி பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
  • ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் இடைவெளி எடுப்பது நல்லது.

இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், நாள் முழுவதும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health During Summer: கோடை வெயிலில் மன அழுத்தமா? எப்படி தப்பிப்பது?

Image Source: Freepik

Read Next

Clear Skin Mask: இந்த 2 பொருள் போதும்… கோடையிலும் உங்க முகம் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளபளக்கும்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version