Doctor Verified

டாய்லெட்டில் மொபைல் ஸ்க்ரோல் பண்ணறீங்களா? ஆபத்து.! உடனே நிறுத்துங்க..

டாய்லெட்டில் மொபைல் ஸ்க்ரோல் செய்வது மூலநோய் அபாயத்தை 46% அதிகரிக்கிறது. நீண்ட நேர அமர்வு, இடுப்பு அழுத்தம், கவனச்சிதறல் – அனைத்தும் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்து. முழு தகவல்களும் தீர்வுகளும் இங்கே.
  • SHARE
  • FOLLOW
டாய்லெட்டில் மொபைல் ஸ்க்ரோல் பண்ணறீங்களா? ஆபத்து.! உடனே நிறுத்துங்க..

இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஸ்மார்ட்ஃபோன் நம்மோடு சேர்ந்து வரும் இடங்களில் ஒன்றாக கழிப்பறையும் மாறிவிட்டது. ஆனால் இது பாதிப்பில்லாத பழக்கம் இல்லை. டாய்லெட்டில் மொபைல் ஸ்க்ரோல் செய்வது உங்கள் உடலுக்கு குறிப்பாக குடல் மற்றும் ஆசனவாய் ஆரோக்கியத்திற்கு பெரும் அபாயம் என்று மருத்துவர் சௌரப் சேதி கூறுகிறார்.


முக்கியமான குறிப்புகள்:-


ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறவர்களுக்கு 46% அதிக அபாயம்

சமீபத்திய மருத்துவ ஆய்வுகள், டாய்லெட்டில் மொபைல் பயன்படுத்தும் பெரியவர்கள் 46% அதிகமாக மூலநோய் (Hemorrhoids) உருவாகும் அபாயத்தில் இருப்பதாக உறுதிப்படுத்துகின்றன.

உணவில் உள்ள நார்சத்து, வயது, எடை, உடற்பயிற்சி அளவு, அல்லது அழுத்துவது போன்ற காரணிகள் இருந்தாலும் கூட, மொபைல் பயன்படுத்துவது மட்டும் அபாயத்தை உயர்த்துகிறது.

நீங்க நினைப்பதை விட நீண்ட நேரம் அமர்ந்திருப்பீங்க

ஆய்வுகளின்படி, 37% மொபைல் பயனாளிகள் டாய்லெட்டில் 5 நிமிடங்களுக்கு மேல் இருக்கிறார்கள். அதே சமயம் மொபைல் பயன்படுத்தாதவர்களில் 7% பேர் மட்டுமே அதே செயல்முறையை செய்கிறார்கள். நீண்ட நேர அமர்வால் ஆசனவாய் திசுக்களில் அழுத்தம் அதிகரித்து, ரத்த நாளங்கள் வீங்குவதற்கு வழிவகுக்கிறது.

5 நிமிடத்தை தாண்டினால் ஆபத்து அதிகரிக்கும்

கழிப்பறையில் ஐந்து நிமிடத்தை கடந்து அமர்வது ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். இந்த நீண்ட நேர அமர்வு ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்த நாளங்களுக்கு தொடர்ச்சியான அழுத்தத்தை அளிக்கிறது.

இந்த அழுத்தம் படிப்படியாக அதிகரித்து, இரத்த நாளங்களை பலவீனப்படுத்தும். பலவீனமான ரத்த நாளங்கள் வீக்கத்திற்கும், அதன்பின் எரிச்சலுக்கும் வழிவகுக்கின்றன. இறுதியில் இது மூலநோய் உருவாகும் அபாயத்தை நேரடியாக தூண்டுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மெனோபாஸ் பற்றிய கவலை வேணாம்! அதிலிருந்து நிவாரணம் பெற உதவும் 4 இயற்கை தீர்வுகள்..

இடுப்புத்தளம் ஆதரவிழந்து பெரும் அழுத்தம் பெறுகிறது

சாதாரண நாற்காலிகளில் அமரும்போது இடுப்புத்தள தசைகளுக்கு ஒரு அளவு ஆதரவு கிடைக்கிறது. ஆனால் toilet seat அப்படியொரு ஆதரவும் வழங்காது. இந்த ஆதரவின்மை காரணமாக, நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது pelvic floor மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் நேரடியாக hemorrhoidal cushions எனப்படும் ஆசனவாய் திசுக்களைப் பாதிக்கிறது.

இரத்த ஓட்டம் மந்தமாகி, ரத்த நாளங்கள் சுருங்கிப் போகாமல் வீங்க ஆரம்பிக்கின்றன. இதன் விளைவாக திசுக்கள் பலவீனப்படும், எரிச்சல், வலி, நெருப்பு போல குத்தும் உணர்வு, சில நேரங்களில் ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகள் உருவாகும். நீண்ட நேரம் அமருவது உடலால் சாதாரணம் என்று நினைத்தாலும், pelvic floor ஆதரவின்றி இருப்பது மூலநோய் உருவாவதில் மிகப் பெரிய காரணியாக நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

மூலநோய் அபாயத்தை குறைக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்

கழிப்பறையில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது. ஐந்து நிமிடங்களைத் தாண்டாமல் முடித்துவிடுவது ஆசனவாய் திசுக்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவும். மொபைல் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தால் கூட, “Two-Reel Rule” எனப்படும் முறையைப் பின்பற்றி இரண்டு ரீல்களுக்கு மேல் பார்த்துவிட வேண்டாம்.

சிறந்தது, கழிப்பறையில் மொபைலை முழுமையாகத் தவிர்ப்பதே. மேலும், கால்களை ஸ்டூல் மீது வைத்து சற்று முன்னோக்கி சாய்ந்து அமருவது குடல் இயக்கத்தை எளிதாக்கி, அழுத்தத்தை குறைக்கும். கவனம் செலுத்திய குறுகிய toilet breaks, digestion-ஐ மேம்படுத்தவும் மூலநோய் அபாயத்தை தடுக்கவும் உதவும்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

இறுதியாக..

டாய்லெட்டில் மொபைல் ஸ்க்ரோல் செய்வது ஒரு சாதாரண பழக்கம் போல தோன்றினாலும், அது உங்கள் குடல் ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கும் ஒரு மறைமுக அபாயம்.

Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்படும் தகவல்கள் பொதுவான அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப தனிப்பட்ட தீர்வுகளுக்குத் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

Read Next

ஃபேட்டி லிவரைக் குறிக்கும் இந்த 8 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 19, 2025 11:53 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்