Mind Control Tips: அலைபாயும் மனதை அமைதிப்படுத்த இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Mind Control Tips: அலைபாயும் மனதை அமைதிப்படுத்த இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க


Ways To Control Mind And Emotions: உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியமும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில், நல்ல மன ஆரோக்கியமே வாழ்க்கையை நல்ல வழிப்பாதையில் செல்ல ஏதுவாக அமைகிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களால் மனஅமைதியை பாதிக்கலாம். இதனால், பதற்றம், மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். இது கட்டாயம் எதிர்மறை எண்ணங்களின் காரணமாக இருக்கலாம். பல சமயங்களில் வாழ்க்கையில் ஏதோ சரியாக நடக்கவில்லை எனில், அதனால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாம் நம்முடைய சுய பராமரிப்பை இழக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். மேலும் இலக்கிலிருந்து திசை திரும்புதல், தைரியம், நம்பிக்கையை இழப்பது போன்றவற்றால் நாம் பலவீனமடையலாம். இது போன்ற நிலைகள் மன அழுத்தத்தைத் தீவிரபடுத்தும். இந்த பிரச்சனைகளைத் தவிர, வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலையில் வாழ்க்கையில் பல நிலைகள் வரலாம். இது போன்ற நிலைமைகளைத் தவிர்க்க, நாம் எந்த சூழ்நிலையிலும் நேர்மறையாக இருக்க வேண்டும். ஏனெனில், நேர்மறையான எண்ணங்களின் மூலம் முடிவுகளும் நேர்மறையாக அமையும். இதில் நேர்மறையான எண்ணங்களை வளர்க்க நாம் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஜப்பானியர்களைப் போல ஹெல்த்தியா இருக்க தொடர்ந்து 28 நாள்கள் இத ஃபாலோ பண்ணுங்க!

எதிர்மறை எண்ணங்களை விலக்குவது எப்படி?

தியானம் செய்வது

பொதுவாக தியானம் செய்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க முடியும். இதற்காக தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி தியானம் மற்றும் யோகா செய்யலாம். மேலும் தியானம் செய்வதற்கு ஏற்ப அமைதியான சூழலைத் தேர்வு செய்யலாம். இதில் தினமும் காலையில் 10 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

புத்தகம் படிக்கும் பழக்கம்

புத்தகங்கள் மனிதனின் சிறந்த நண்பர்கள் என்றே கூறலாம். சிந்தனை நேர்மறையாக இருக்க, தினமும் நல்ல புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகம் படிப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விலகி நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றுகிறது. புத்தகங்களைப் படிப்பதுடன், எண்ணங்களை எழுத ஒரு நாட்குறிப்பும் செய்யலாம். இந்த நாட்குறிப்பில் முழு தினசரி வழக்கத்தையும் எழுத வேண்டும். இதன் மூலம் நேர்மறையான மேற்கோள்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

பொழுதுபோக்கிற்கு நேரம் ஒதுக்குவது

இன்றைய பிஸியான காலகட்டத்தில் மக்கள் தங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், எப்போது மனதில் கெட்ட எண்ணங்கள் வரத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் மனதை மாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். மனதை மாற்றுவதற்கு பொழுதுபோக்கிற்காக நேரம் கொடுக்க வேண்டும். இந்த வழியில், நம்மை பிஸியான வைத்திருப்பதற்கு நடனம் செய்வது, சமையல் செய்வது, பாடுவது அல்லது ஓவியம் வரைவது என எதுவாக இருந்தாலும் அதை செய்யலாம். இது மோசமான மனநிலையை குணப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா?

குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவது

இன்றைய பரபரப்பான வாழ்க்கையால், மக்கள் தங்கள் குடும்பத்திற்கு நேரம் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். ஆனால், குடும்பத்துடன் இருக்கும்போது எப்போதும் மகிழ்ச்சி உணர்வுடன் இருக்கலாம். இவ்வாறு இருக்கும் போது கவலைகளும் விலகி விடும் வாய்ப்பு அதிகமாகும். எனவே எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் தரமான நேரத்தை செலவிட வேண்டும்.

எண்ணத்தை திசை திருப்புவது

எப்போதெல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறதோ அப்போது கவனத்தைத் திசை திருப்ப முயற்சி செய்ய வேண்டும். இதற்கு நாம் இசையின் உதவியை நாடலாம். மேலும் உங்களைச் சுற்றி சிறிய குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும். மன அழுத்தம் இருக்கும் போது செய்யும் எந்த வேலையையும் சிறிது நேரம் விட்டுவிட்டு, வேறு ஏதாவது செய்யத் தொடங்க வேண்டும்.

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் விலகி இருப்பது

எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட நபர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நபர்களுடன் இருப்பது சிந்தனையை எதிர்மறையாக மாற்றலாம். எனவே நேர்மறை எண்ணம் கொண்ட நபர்கள் மற்றும் மகிழ்ச்சியான நபருடன் எப்போதும் நட்பு கொள்ள வேண்டும். இவ்வாறு நேர்மறை எண்ணங்கள் பரவி வருகிறது.

இவ்வாறு எதிர்மறை எண்ணங்களைக் கொண்டவர்கள் இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உணவுக்குப் பின் ஒரு 10 நிமிஷம் நடந்தா உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Physiotherapy Benefits: இந்த காரணத்துக்காக நீங்க பிஸியோதெரபியை கண்டிப்பா செய்யணும்!

Disclaimer