Homemade ginger cough drops: அன்றாட வாழ்வில் எந்த காலநிலையிலும் எதாவதொரு சூழ்நிலையில் இருமல் மற்றும் தொண்டை வலி தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். இது பெரும்பாலும் நம்முடைய அன்றாட செயல்பாடுகளைப் பாதிப்பதாகவே அமைகிறது. எனினும், இருமலைக் குணப்படுத்த ஆரம்பத்திலேயே நாம் கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறோம். எனினும் இயற்கையான முறையில் வீடுகளில் தயார் செய்யப்படக்கூடிய சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இருமலைக் குணப்படுத்தலாம்.
அவ்வாறு வீட்டிலேயே இயற்கையான மற்றும் ரசாயனம் அல்லாத தேர்வாக விளங்கும் இருமல் மருந்துகளைத் தயார் செய்யலாம். இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இஞ்சி இருமல் சொட்டு மருந்துகளுக்கான எளிய செய்முறை குறித்து காணலாம். இது ஒரு பெரிய மாற்றாகக் கருதப்படுகிறது. இதற்கு வீட்டில் எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருள்களையே பயன்படுத்தலாம். மேலும் இது இனிமையானவை மட்டுமல்லாமல், சுவையாகவும் காணப்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Cough Syrup: இருமல் சிரப் குடித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்னவாகும்?
வீட்டிலேயே இருமல் சொட்டு மருந்து தயார் செய்வது எப்படி?
தேவையானவை
- வெல்லம் - 1 கப் (தாதுக்கள் நிறைந்த பதப்படுத்தப்படாத கரும்பு சர்க்கரை)
- இஞ்சி சாறு - 1/4 கப் (சளி, இருமல் மற்றும் தொண்டை எரிச்சலுக்கான இயற்கை மருந்து)
இந்த இரண்டு பொருள்களையும் கலந்து எடுத்துக் கொள்வது ஒரு சக்திவாய்ந்த கலவையாக மாறுகிறது. இதில் வெல்லம் அடித்தளமாக செயல்பட்டு தொண்டை அரிப்பைத் தணிக்க உதவுகிறது. அதே சமயம், இது இனிப்பு சுவையை வழங்கக் கூடியதாகும். அதே சமயம், இஞ்சி சாறு அதன் மருத்துவ குணங்களுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இது தொண்டையை ஆற்றுவதற்கும், வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் மற்றும் இருமல் அறிகுறிகளைப் போக்குவதற்கும் பெரிதும் நன்மை பயக்கும்.
cold and cough
செய்முறை
வீட்டிலேயே தயாரிக்கப்படக்கூடிய இந்த இருமல் சொட்டு மருந்துகளைத் தயாரிப்பது எளிதானதாகும். இதில் எப்படி தயார் செய்வது என்பது குறித்து காணலாம்.
தேவையான பொருள்களைச் சேர்ப்பது
முதலில் அடித்தடத்தையுடைய ஒரு பாத்திரத்தில், வெல்லம் மற்றும் இஞ்சி சாற்றைச் சேர்த்து கலக்க வேண்டும். இதில் வெல்லம் எரிவதைத் தடுக்க, பாத்திரம் குறைந்த முதல் நடுத்தர வெப்பத்தில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
கலவையை சமைக்கலாம்
பிறகு இந்தக் கலவையை 10-12 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி விடலாம். இதில் வெல்லம் உருகும் போது, அது குமிழியாகி கெட்டியாகத் தொடங்குகிறது.
நிலைத்தன்மையை அடைவது
சரியான இருமல் சொட்டு மருந்துக்கான திறவுகோல் கலவையின் நிலைத்தன்மையில் உள்ளதா என்பதைச் சோதிக்க வேண்டும். அதற்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீரில் ஒரு சிறிய அளவு கலவையை விட வேண்டும். அது உடனடியாக கெட்டியாகி, அதைப் பிடிக்க முயற்சிக்கும் போது கலவை கண்ணாடி போல உடையும். இந்நிலையில் இருப்பின், அது தயாராக உள்ளது என்பது அர்த்தம். இதுவே, கலவை நீட்டக்கூடியதாகவோ அல்லது நெகிழ்வானதாகவோ இருப்பின், இன்னும் இரண்டு நிமிடங்கள் வேக வைத்து மீண்டும் சோதிக்க வேண்டும்.
கலவை சரியான நிலைத்தன்மையை அடைந்த பிறகு, அதை ஒரு சிலிகான் அல்லது உலோக அச்சுக்குள் ஊற்ற வேண்டும். அச்சு இல்லையெனில் கவலை வேண்டாம். அதற்குப் பதிலாக, ஒரு எண்ணெய் தடவிய தட்டில் பயன்படுத்தலாம். பிறகு இது உறுதியானதும் சிறிய துண்டுகளாக வெட்டலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல உணர்வா? என்ன காரணமா இருக்கும்.. மருத்துவரின் பதில் இதோ
குளிர்விப்பது
இதை முழுமையாக குளிர்விக்க விட வேண்டும். குறிப்பாக, இவை ஒன்றை ஒன்று ஒட்டாமல் இருக்க, சோள மாவை லேசாகத் தூவலாம். இவ்வாறு செய்வது, கலவை நீண்ட நேரம் புதியதாக இருப்பதை உறுதி செய்கிறது.
benefits-of-drinking-amla-ginger-shot-Main
சேமிக்கும் முறை
இந்த இருமல் சொட்டு மருந்தை காற்று புகாத கொள்கலனில் மாற்றி குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். இதை வாரக்கணக்கில் பயன்படுத்தலாம். இது தேவைப்படும் போதெல்லாம் இருமலுக்கு நிவாரணத்தை அளிக்கும்.
குறிப்பு
இருமல் சொட்டுகளை அமைக்க எப்போதும் சிலிகான் அல்லது உலோக அச்சுகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இவை அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியவையாகும்.
கலவையை அமைப்பதற்கு முன்பாக சரியான நிலைத்தன்மையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், இது சரியாக கடினப்படுத்தப்படாமல் போகலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட மருந்து ஏன் சிறந்தது?
வீட்டில் தயாரிக்கப்படக்கூடிய இந்த மருந்துகளில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, செயற்கை சுவைகள் மற்றும் பாதுகாப்புகள் எதுவும் இல்லை. மேலும் இவை கடையில் வாங்கும் விருப்பங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கக்கூடிய ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது. வெல்லம் மற்றும் இஞ்சி சாற்றைக் கொண்டு இவ்வாறு வீட்டிலேயே இனிமையான மருந்தைத் தயார் செய்யலாம்.
இந்த செயல்முறை தகவல்கள் மற்ற வலைப்பதிவுகளின் அடிப்படையிலாக பெறப்பட்டதாகும். எனினும், சிறந்த முடிவுகளுக்கு மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இஞ்சி மற்றும் தேன் ஒன்றாக சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?
Image Source: Freepik