சூரிய ஒளி வெப்பத்தால் சரும எரிச்சலா? கிட்சனில் உள்ள இந்த பொருள்கள் உங்களுக்கு உதவும்

How to get rid of sunburn naturally at home: சூரிய ஒளி வெப்பத்தால் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் சருமம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதைத் தவிர்க்க விலையுயர்ந்த சிகிச்சைகளை நம்புவதற்குப் பதிலாக, உடனடி நிவாரணத்தைப் பெற சில இயற்கை வைத்தியங்களைக் கையாளலாம். இதில் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கான முறைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சூரிய ஒளி வெப்பத்தால் சரும எரிச்சலா? கிட்சனில் உள்ள இந்த பொருள்கள் உங்களுக்கு உதவும்

How to cure sunburn naturally at home: கோடைக்கால வெப்பத்தால் மக்கள் பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தாங்க முடியாத வெப்பத்தை உணர்கின்றனர். இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கோடைக்காலத்தில் அதிகப்படியான சூரிய வெப்பத்தால் சருமத்தில் எரிச்சலை உணர்கிறோம்.

எனவே தான் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட, சன்ஸ்கிரீன் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இது சில சமயங்களில் விலை மிகுந்ததாக இருக்கலாம். அதே சமயம், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அதை மீண்டும் பயன்படுத்துவதுவதற்கான தேவை ஏற்படலாம். எனவே எல்லா நேரங்களிலும் இதை வெயிலில் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிலர் இதைப் பயன்படுத்துவதையும் தவிர்ப்பர்.

எனினும், இயற்கையாகவே வெயிலுக்கு சிகிச்சையளிக்க நம் வீட்டில் உள்ள சில கிட்சன் பொருள்களைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தை குளிர்விக்கவும், மீட்பை விரைவுபடுத்தவும் உதவுகிறது. அதில் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Ice Cube For Face: முகத்திற்கு ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்வது நல்லதா?

வெயிலைத் தணிக்க உதவும் கிட்சன் பொருள்கள்

தயிர்

கோடைக்காலத்தில் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய பிரதானமான ஒன்றாக தயிர் அமைகிறது. இது வெயிலில் எரியும் போது நிவாரணம் அளிக்கக்கூடிய ஒரு சிறந்த தேர்வாகும். தயிரில் லாக்டிக் அமிலம் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளது. இவை உடலுக்குக் குளிர்ச்சியான விளைவை அளிக்கவும், சேதமடைந்த சருமத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. தயிரை பாதிப்புக்குள்ளான பகுதியில் நேரடியாக தடவி, 15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் விரைவில் வித்தியாசத்தை உணரலாம்.

image
plain-curd-yogurt-dahi-hindi-ser-1743859881233.jpg

கிரீன் டீ பேக்

இது ஆறுதல் அளிக்கும் கஷாயம் தயாரிப்பதற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கருப்பு அல்லது பச்சை தேநீர் பைகளில் டானின்கள் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைத்து சருமத்தின் சமநிலையை மீட்டெடுக்க உதவுகின்றன. குளிர்ந்த நீரில் சில பைகளை ஊறவைத்து, பின்னர் அவற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாக அழுத்த வேண்டும். மேலும், மென்மையான துணியைப் பயன்படுத்தி திரவத்தை சருமத்தில் தடவலாம். இந்த எளிய தீர்வு விரைவான மற்றும் பயனுள்ள நிவாரணத்தை வழங்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

சருமத்தில் ஆரம்ப சிவத்தல் குறையும் போது, தோல் உரிக்கத் தொடங்கலாம். இந்நிலையில், சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது ஆழமாக ஈரப்பதமாக்குவதன் மூலம், அரிப்பைத் தடுக்கவும் உதவுகிறது. தோல் குளிர்ந்த பின்னரே இதைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் புதிய தீக்காயங்களில் இதைப் பயன்படுத்துவது வெப்பத்தைத் தடுக்கலாம். இதன் வழக்கமான பயன்பாடு சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sun Protection Foods: வெயிலிடம் இருந்து தப்பிக்க இதை சாப்பிட்டாலே போதும்.!

தேன்

இது இனிப்பு மற்றும் ஒட்டும் தன்மை கொண்டதாகும். இது பெரும்பாலும் இயற்கையின் குணப்படுத்தும் தைலம் என்று அழைக்கப்படுகிறது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளது. இவை சருமத்தை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது. இதற்கு தேனை பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு மெல்லிய அடுக்காக தடவி, 20 நிமிடங்கள் அப்படியே வைத்து கழுவ வேண்டும்.

image
what-are-the-benefits-of-source-based-honey-02

ஓட்ஸ்

காலை உணவாக நாம் எடுத்துக் கொள்ளும் ஓட்ஸ் ஆனது வெயிலிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் எரிச்சலைத் தணித்து சிவப்பைக் குறைக்க வழிவகுக்கிறது. இதற்கு ஒரு கப் ஓட்ஸை நன்றாகப் பொடி செய்து, குளிர்ந்த குளியல் நீரில் கலந்து, 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதன் மூலம் உடனடி நிவாரணம் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Remedies for Sunburn: கொளுத்தும் வெயிலில் முகம் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதா? ஒரே இரவில் சன் பர்ன் நீங்க டிப்ஸ்!

Image Source: Freepik

Read Next

எப்போர்ப்பட்ட முதுகு வலியில் இருந்தும் நிவாரணம் பெற இந்த 5 வீட்டுவைத்தியங்கள ட்ரை பண்ணுங்க...!

Disclaimer