$
How to use natural plants for hair growth: இன்றைய நவீன உலகில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் போதிய ஊட்டச்சத்து இல்லாமை காரணமாக முடி ஆரோக்கிய பாதிப்புகளான முடி உதிர்தல், முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தருகிறது. எனவே முடி பராமரிப்பு வழக்கத்தை ஆரோக்கியமாகக் கையாள வேண்டியது அவசியமாகும்.
இதற்கு மக்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஷாம்புகள், எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளைக் கையாள்கின்றனர். ஆனால், சில சமயங்களில் இவை முடி உதிர்தல், முடி வறட்சி உள்ளிட்ட பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகள் எழுகின்றன. இந்த சமயத்தில் மக்கள் தங்களது முடி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்க இயற்கையான வழிமுறையைக் கையாள்வது அவசியமாகும். இதில் தலைமுடி ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும் இயற்கையான தாவரங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fish Oil for Hair: முடி வளர்ச்சியைத் தூண்டும் மீன் எண்ணெய்! எப்படி பயன்படுத்துவது?
முடி ஆரோக்கியத்திற்கு உதவும் தாவரங்கள்
முடி பராமரிப்பை ஆதரிக்கும் வகையில், இயற்கையான மற்றும் அற்புதமான பல்வேறு தாவரங்கள் உள்ளன. இவை பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, இதனை ஷாம்புகள், எண்ணெய்கள், ஹேர் மாஸ்க் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தலாம். இதில் அற்புதமான முடி வளர்ச்சிக்கு உதவும் தாவரங்களையும், அதை நம் பராமரிப்பு முறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி தாவரமானது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது. இது முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான, பயனுள்ள மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரோஸ்மேரி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கவும், முன்கூட்டிய முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இவை அரிப்பு உச்சந்தலையை அமைதிப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், முன்கூட்டிய நரையைத் தடுக்க உதவுகிறது.

தலைமுடிக்கு ரோஸ்மேரியை பயன்படுத்துவது எப்படி?
- ரோஸ்மேரி எண்ணெயை நேரடியாக உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம் அல்லது இதை பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற மற்ற கேரியர் எண்ணெயுடன் நீர்த்துப் போகச் செய்யலாம்.
- இதை முடியில் ஒரு மணி நேரம் அல்லது ஒரே இரவில் வைத்து நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் உதவியுடன் முடியைக் கழுவ வேண்டும்.
கற்றாழை
இது முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களில் ஒன்றாகும். இந்த முடி ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கற்றாழை, முடி பராமரிப்பு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை நேரடியாக தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புதிய ஜெல்லைப் பயன்படுத்தலாம் அல்லது வேறு சில இயற்கை பொருள்களுடன் கலந்து பயன்படுத்தலாம். குறிப்பாக, இதில் pH அளவு மிகக் குறைவாக இருப்பதால், இது உச்சந்தலைக்கு சிறந்ததாகும். மேலும் கற்றாழை ஜெல்லில் தாதுக்கள், தாமிரம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. எனவே இது பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
கற்றாழையை முடிக்கு பயன்படுத்தும் முறை
- முதலில் சில இயற்கை கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
- இதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் நன்கு மசாஜ் செய்து கற்றாழை கலந்த ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
- பிறகு ஒரு நல்ல கண்டிஷனரின் உதவியுடன் முடியைக் கழுவுவதன் மூலம் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எந்த ஷாம்பூவா இருந்தாலும் இப்படி யூஸ் பண்ணா முடி கொட்டவே கொட்டாது!
நெல்லிக்காய்
முடி சார்ந்த பராமரிப்பிற்கு உதவும் மிகவும் பிரபலமான தாவரங்களில் ஒன்றாக நெல்லிக்காய் அமைகிறது. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரமாகும். தலைமுடிக்கு நெல்லிக்காயை எண்ணெய், ஷாம்பு அல்லது பச்சையாகப் பயன்படுத்தப்படலாம். மேலும், இது இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது தவிர நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜன் புரதத்தை ஊக்குவித்து முடி வளர்ச்சியின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், இறந்த செல்களை வெளியேற்றி மயிர்க்கால்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.

நெல்லிக்காயை முடிக்கு பயன்படுத்துவது எப்படி
- தலைமுடிக்கு நெல்லிக்காய் சாற்றை உச்சந்தலையில் நேரடியாக பிழிந்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
- இதை 10 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு நல்ல ஆம்லா ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
செம்பருத்தி
செம்பருத்தியில் அமினோ அமிலங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது. இதன் பூக்கள், இலைகள் என அனைத்தும் முடியின் மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டவும், புதிய முடி உருவாவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள அமினோ அமிலங்கள் கெரட்டின் உருவாவதைத் தூண்டுவதன் மூலம் முடியை பாதுகாக்கிறது. இது தவிர, பொடுகு, பிளவு முனை பிரச்சனைக்கும், உச்சந்தலையில் உள்ள எண்ணெய்த் தன்மையை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. முடிக்கு செம்பருத்தியைப் பயன்படுத்துவது வலுவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
செம்பருத்தியை முடிக்கு பயன்படுத்துவது எப்படி
- முதலில் மூன்று முதல் நான்கு செம்பருத்தி பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு தண்ணீரை வடிகட்டி இதைத் தினமும் உச்சந்தலையைச் சுற்றி ஒரு மூடுபனியாகப் பயன்படுத்த வேண்டும்.
- அல்லது சிறந்த முடிவைப் பெற இந்த மூடுபணியை எண்ணெயில் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இந்த வழிமுறைகளில் தலைமுடிக்கு இயற்கையான தாவரங்களைப் பயன்படுத்தலாம். இவை முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Castor Oil For Hair: கரு கரு முடிக்கு விளக்கெண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!
Image Source: Freepik