How Does Fish Oil Help In Hair Growth: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. அந்த வகையில் மீன் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.
மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, ஹெர்ரிங், மத்தி, சால்மன் போன்ற மீன்களின் திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இது திரவ வடிவில் அல்லது காப்ஸ்யூல்களில் உட்கொள்ளப்படுகிறது. இவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் அதிக செறிவைக் கொண்டுள்ளது. இந்த கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைத்தல், இதய ஆரோக்கியம் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே இவை உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நரம்புகளுக்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது. இதில் முடிக்கு மீன் எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dandruff Remedies: பொடுகுத் தொல்லையை நிமிடத்தில் விரட்டும் சூப்பர் வீட்டு வைத்தியங்கள் இதோ!
மீன் எண்ணெய்
மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. குறிப்பாக டோகோசாஹெக்ஸெனோயிக் (டிஹெச்ஏ), ஈகோசாபென்டேனோயிக் (இபிஏ) போன்றவை உள்ளது. இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலங்களை உடலால் அவற்றைத் தானாகவே உற்பத்தி செய்ய முடியாது. மேலும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் என்ற மற்றொரு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆனது, பல்வேறு நட்ஸ், விதைகள் மற்றும் தாவர எண்ணெய்களில் காணப்படுகிறது.
முடி வளர்ச்சிக்கு மீன் எண்ணெய் தரும் நன்மைகள்
- சருமம் மற்றும் முடி இரண்டின் ஆரோக்கியத்திற்கும் மீன் எண்ணெய் உதவுகிறது. சருமத்திற்கு மீன் எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முகப்பருவைச் சமாளிக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்துவது முடி அடர்த்தியில் பங்களிக்கிறது.
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குணமாக்கவும், குறைக்கவும் உதவுகிறது. மேலும் இவை முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
- இந்த அமிலங்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதற்கு பங்களிக்கிறது. இவை முடிக்கு நன்கு ஊட்டமளிப்பதுடன் பொடுகு அல்லது அதிகப்படியான வறட்சி போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட வைக்கிறது.
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த அதிகரித்த இரத்த ஓட்டம் முடியின் மயிர்க்கால்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இவை ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியின் வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது.
இது போன்று மீன் எண்ணெய்களைப் பயன்படுத்துவது முடியின் அமைப்பை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Curd Hairmask: ஸ்ட்ராங்கான, பளபளப்பான முடிக்கு தயிருடன் இந்த பொருள்களைச் சேர்த்து யூஸ் பண்ணுங்க
முடிக்கு மீன் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது
மீன் எண்ணெய் சப்ளிமென்ட் எடுக்க விரும்பாதவர்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவை நல்ல முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, குளிர்ந்த நீர் கொழுப்பு நிறைந்த மீன்கள், கானாங்கெளுத்தி, சால்மன், டுனா மற்றும் மத்தி போன்றவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்களாகக் கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு வேளை கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்வதன் மூலம் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் அளவைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வது
போதுமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் பெறவில்லை எனில், மீன் எண்ணெய் சப்ளிமெண்ட் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். ஆனால், இதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மீன் எண்ணெயில் உள்ள இரண்டு முக்கிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களான EPA மற்றும் DHA போன்றவை உயர்தர சப்ளிமெண்ட்டில் இருக்க வேண்டும். இதில் மீன் எண்ணெயை காப்ஸ்யூல்களாக எடுப்பது எளிதானதாகும். மேலும் இவை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இவை முடி ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும்.
மேற்பூச்சாக மீன் எண்ணெய்
மேலே கூறப்பட்ட இரண்டு வழிகளைத் தவிர திரவ மீன் எண்ணெயை எடுத்து, மென்மையான, வட்ட இயக்கங்களைப் பயன்படுத்தி உங்கள் உச்சந்தலையில் எண்ணெயை மசாஜ் செய்யலாம். இதை 30 முதல் 60 நிமிடங்கள் வைத்து பிறகு எண்ணெயை அகற்ற ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவி விடலாம். ஆனால், மீன் எண்ணெயை பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. இதில் மீன் எண்ணெய் ஒரு வலுவான வாசனையைக் கொண்டதாக இருப்பதால், இந்த நீடித்த வாசனையை அகற்ற தலைமுடியை நன்கு கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மீன் எண்ணெயை முடி ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம். எனினும், மீன் எண்ணெய் சிலருக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் இது அரிப்பு, சிவத்தல் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகலாம். எனவே மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மீன் எண்ணெயைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fish Oil for Hair: முடி வளர்ச்சிக்கு மீன் எண்ணெயின் சில ஆரோக்கியமான நன்மைகள்
Image Source: Freepik