$
தலைமுடி பிரச்சனைக்குத் தீர்வாக பல்வேறு இயற்கையான எண்ணெய்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், முடி வளர்ச்சிக்கு மீன் எண்ணெய் பிரபலமடைந்து வரும் ஒன்றாகும். இந்த கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த மீன் எண்ணெய் இன்னும் பல்வேறு நன்மைகளை தலைமுடிக்கு அளிக்கிறது. இப்போது தலைமுடி பிரச்சனைக்கு மீன் எண்ணெய் தரும் பல்வேறு நன்மைகள் குறித்து காணலாம்.
மீன் எண்ணெய்
ஒமேகா 3 அல்லது மீன் எண்ணெய் என்பது கொழுப்பு போன்ற திரவம் ஆகும். இது கொழுப்புகள் நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. மீன் எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டுவதுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனினும், இவற்றை கல்லீரல், நீரிழிவு நோய் போன்ற நோயாளிகள் தவிர மற்றவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், தினந்தோறும் 1.1 கிராம் முதல் 1.6 கிராம் வரை அளவு மட்டுமே உட்கொள்ளலாம். பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும் மீன் எண்ணெய் எவ்வாறு தலைமுடிக்கு உதவுகிறது என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
தலைமுடிக்கு மீன் எண்ணெய் நன்மைகள்
தலைமுடி வளர்ச்சிக்கும், முடி உதிர்தலைக் குறைக்கவும் மற்றும் இன்னும் பல்வேறு நன்மைகளைத் தரும் மீன் எண்ணெயின் நன்மைகளைக் காணலாம்.
- ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது காயத்திற்கு பிறகு திசுக்களைச் சரிசெய்ய உதவுகிறது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உச்சந்தலையில் ஏற்படும் அழற்சி போன்றவற்றைக் குறைக்கலாம்.
- மீன் எண்ணெய் சருமம் மற்றும் உச்சந்தலையை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மயிர்க்கால்கள் வரை ஊட்டமளித்து முடியை வளர்ச்சியடையச் செய்கிறது.
- இந்த கொழுப்பு அமிலங்கள் தலைமுடியை சமன் செய்கிறது. உச்சந்தலையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக நீண்ட காலத்திற்கு விநியோகத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
- இதில் உள்ள ஊட்டச்சத்துகள், முடியின் ஆழம் வரை நன்கு ஊடுருவி அடர்த்தியான முடியைத் தருகிறது.
- ஒமேகா 3 நிறைந்த தாவர எண்ணெய் முடியை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
- உச்சந்தலையில் மீன் எண்ணெயை மசாஜ் செய்யும் போது, முடி வளர்ச்சியை ஊக்குவித்து இரத்ட ஓட்டத்தை சீராகவும், அதிகரிக்கவும் உதவுகிறது.
- ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது. மீன் எண்ணெய் பயன்படுத்துவதால் இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைக்கப்பட்டு முடி உதிர்வைத் தடுக்கிறது.
- அடர்த்தியான முடியை ஊக்குவிப்பதற்கு மீன் எண்ணெயில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களே காரணம் ஆகும்.
- மீன் எண்ணெயுடன் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம், முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
Image Source: Freepik