Ways To Use Amla And Pudina For Hair: தலைமுடி கருப்பாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம் ஆகும். ஆனால், நவீன காலகட்டத்தில் மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றின் விளைவாக பெரும்பாலானோர் தலைமுடி உதிர்வு, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
உண்மையில் தலைமுடி போதுமான ஊட்டச்சத்து பெறுவதை நிறுத்தும் சமயத்தில், அது உயிரற்றதாக மாறிவிடும். அதன் பிறகு, இவற்றின் நிறம் மாறலாம். இதில் முடியின் நிறம் வெண்மையாகி உடைந்து உதிரத் தொடங்கலாம். இது போன்ற முடி பிரச்சனைகளை நீக்க இயற்கையான வைத்தியத்தைக் கையாளலாம். இதில் இயற்கையான முறையில் கூந்தலை கருமையாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
புதினா மற்றும் நெல்லிக்காய்
ஆம்லா, புதினா இவை இரண்டுமே முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இவற்றைத் தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் நீளமான மற்றும் கருமையான கூந்தலைப் பெறலாம். இதில் கருமையான கூந்தலைப் பெற புதினா இலை மற்றும் நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Veppilai For Dandruff: பொடுகு தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுபட வேப்பிலையை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.
முடி கருமையாக புதினா இலை மற்றும் நெல்லிக்காயின் நன்மைகள்
உச்சந்தலையில் பாக்டீரியா இல்லாததாக
உச்சந்தலையில் பாக்டீரியா இல்லாததாக மாற்ற, புதினா மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்தலாம். இவை உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்திலிருந்து நிவாரணம் தருவதுடன், பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் முடியின் கருமையை பராமரிக்கலாம்.
முடி வேர்களை வலுவாக்க
புதினா இலைகள், ஆம்லா இரண்டையும் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடியின் மயிர்க்கால்கள் மற்றும் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. அதன் படி, நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வு மற்றும் உடைவதைக் குறைக்கிறது. மேலும், புதினா இலைகள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வேர்களுக்கு வலிமை மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. முடி கருமையை பராமரிப்பதற்கு, அதன் வேர்கள் வலுவாக இருப்பது அவசியமாகும். இவை இரண்டுமே முடியின் கருமையை பராமரிக்கிறது.
முன்கூட்டிய நரைத்தலைத் தடுக்க
இன்று இளம் வயதினரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முன்கூட்டிய முடி நரைப்பது ஆகும். இந்த மாற்றத்தைத் தவிர்க்க நெல்லிக்காய் மற்றும் புதினா இலைகளை பயன்படுத்தலாம். ஆம்லா ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த மூலமாகும். இவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து முடியை பாதுகாக்கிறது. புதினா இலை குளிர்ச்சி மிக்கது என்பதால் இது உச்சந்தலையில் மென்மையாக வைக்கவும், இயற்கையான நிறத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இவை இரண்டையும் சேர்ப்பதன் மூலம் நரைமுடி வருவதைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Split Ends Removing Tips: நுனி முடி பிளவில் இருந்து விடுபட இந்த டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.
கருமையான முடிக்கு புதினா மற்றும் ஆம்லாவை எப்படி பயன்படுத்துவது?
தலைமுடியை கருமையாக மாற்ற புதினா மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
- முதலில் 10 முதல் 12 புதினா இலைகளையும், 4 முதல் 5 ஆம்லாவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அரை கப் அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம்.
- விதைகளை அகற்றிய நெல்லிக்காயையும், புதினாவையும் தேங்காய் எண்ணெயில் கலக்க வேண்டும்.
- அதன் பிறகு இந்த எண்ணெயைக் கொதிக்க வைக்கலாம்.
- பின் இந்த எண்ணெயை வடிகட்டி, கண்ணாடி பாட்டில் ஒன்றில் நிரப்பி இரவில் தலைமுடியில் மசாஜ் செய்யலாம்.
- இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், முடி படிப்படியாக கருப்பாக மாறும்.

தலைமுடிக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாத போதே முன்கூட்டிய நரைமுடி பிரச்சனை, முடி வலுவிழப்பது, உச்சந்தலை தொற்றுக்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வதுடன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். இந்த ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தி, முடி நரைப்பதைத் தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil For Hair: கரு கரு முடிக்கு கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருள்களை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க.
Image Source: Freepik