Doctor Verified

Split Ends Removing Tips: நுனி முடி பிளவில் இருந்து விடுபட இந்த டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.

  • SHARE
  • FOLLOW
Split Ends Removing Tips: நுனி முடி பிளவில் இருந்து விடுபட இந்த டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.

முடி பிளவுகளில் இருந்து விடுபட டிப்ஸ்

ஹீட் ஸ்டைலிங்கைத் தவிர்ப்பது

முடிக்கு வெப்பமூட்டும் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் வெப்ப பாதுகாப்பைப் பயன்படுத்தலாம். இவற்றின் மூலம் வெப்பத்தால் ஏற்படும் முடி பிளவையும், முடி சேதமடைவதையும் தடுக்க முடியும். ஹீட் ஸ்டைலிங்கைப் பயன்படுத்தும் முன்னதாக, வெப்ப பாதுகாபைப் பயன்படுத்துவதன் மூல்ம முடி உதிர்தல் மற்றும் உடைவதைக் குறைக்கலாம். மேலும் இதன் மூலம் பிளவு முனையில் இருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.

தலையணை உறை அல்லது தலைப்பாகை பயன்பாடு

இரவு தூங்கும் முன்பாக தலைமுடியைப் பாதுகாக்கும் வகையில் இரவு தூங்கும் முன்பாக தலையணை உறை அல்லது தலைப்பாகையால் முடியைக் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டு மற்றும் சாடின் தலையணை உறைகள் முடி உராய்வைக் குறைப்பதுடன் முடி உடைவதைக் குறைக்கிறது. மேலும், இவை முடியை மிருதுவாக வைத்திருக்கவும், முடி உதிர்வு பிரச்சனையைக் குறைக்கவும் மற்றும் பிளவு முனைகளை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.

மைக்ரோஃபைபர் ஹேர் டர்பன் பயன்பாடு

தலைமுடி கழுவிய பிறகு மைக்ரோஃபைபர் ஹேர் டர்பன் துண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். இத் சேதமடைந்த மற்றும் இயற்கையாகவே சுருள் முடி உரோமத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. இது கூந்தலை காற்றில் உலர்த்தும் முன்பாக, அதில் உள்ள அதிகப்படியான நீரை நீக்கி, அதன் மூலம் முடி முனைகள் பிளவுபடுவதைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Winter Hair Fall: குளிர்காலத்தில் எக்கச்சக்கமா முடி கொட்டுதா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

முடி பராமரிப்புப் பொருள்கள் பயன்பாடு

தலைமுடியை வலுப்படுத்தவும், முடி பிரச்சனைகளைச் சமாளிக்கவும் நல்ல மற்றும் ஆரோக்கியமான முடி பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்தலாம். அதன் படி, ஹேர் மாஸ்க் போன்ற முடி தயாரிப்புகளைப் பயன்படுத்துவது முடியி ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும், அதைத் தக்கவைக்கவும் உதவுகிறது. மேலும் இது சேதமடைந்த முடியை சரி செய்யவும், முடி பிளவு முனைகளை அகற்றவும் உதவுகிறது.

பிளவு முனைகளின் சிக்கலைக் குறைக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் இவற்றை மேற்கொண்ட பிறகும் முடி பிளவு முனை பிரச்சனை அதிகமாகி விட்டாலோ அல்லது பிளவு முனைகள் சரியாகாமல் இருக்கும் பட்சத்தில் முடி நிபுணரின் உதவியைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Clove Water Hair Benefits: பொடுகுத் தொல்லையை நீக்கும் கிராம்பு நீர். இப்படி பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Remedies For Silky Hair: பட்டு போல் பளபளக்கும் மிருதுவான கூந்தல் வேண்டுமா?… வீட்டுவைத்தியம் இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்