Split Ends Remedies: முடி பிளவு முனைகளால் அவதியா? இந்த ஐந்து பொருள்கள் மட்டும் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Split Ends Remedies: முடி பிளவு முனைகளால் அவதியா? இந்த ஐந்து பொருள்கள் மட்டும் யூஸ் பண்ணுங்க

அதன் படி, முடி உதிர்வு, முடி வறட்சி, முடி உடைந்து போகுதல், பிளவு முனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் எழலாம். இதில் முடி பிளவு முனை என்பது தலையில் அனைத்து முடிகளும் ஒரே உயரத்தில் இருக்காது அல்லத் முடி முனையில் இரண்டு மூன்று முடிகள் பிரிந்து காணப்படும். இன்று பெரும்பாலானோர் தலைமுடியை அழகாக மாற்றுவதற்கு அதிக வெப்பம் மற்றும் இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகமாக அழகானதாக மாற்றும் எனினும், முடியின் வேர்களை சேதப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Mask for Curly Hair: சுருள் முடிக்கு இனி கவலை வேணாம்! இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

பிளவு முனை என்றால் என்ன?

பொதுவாக பிளவு முனைகள் என்பது தலைமுடியின் முனைகள் உதிர்ந்து, உலர்ந்து பிறகு உடையக்கூடியதாக மாறும் நிலையாகும். இது மிகவும் கரடுமுரடான மற்றும் குழப்பமான தோற்றத்தைக் கொண்டு காணப்படும். இந்த முடியின் நிறமானது முடியின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் முனைகளில் மந்தமாக இருக்கும். இதில் முடியின் முனைகள் உடைவதற்கு வாய்ப்புள்ளதால் இது அதிகமான முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.

முடி பிளவு முனையைத் தவிர்க்க உதவும் இயற்கை முறைகள்

வீட்டில் உள்ள சில இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தியே முடி பிளவு முனையைச் சமாளிக்கலாம்.

கற்றாழை

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை சருமம் மற்றும் முடி இரண்டிற்கும் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி பிளவு முனை பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து நேரடியாக உச்சந்தலையில் தடவுவது அல்லது எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க்கில் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும்.

முட்டை

தலைமுடி ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாததாகும். தலைமுடிக்கு தேவையான புரதத்தை வழங்க முட்டைகள் எளிதான வழியாகக் கருதப்படுகிறது. எனவே முட்டை ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை சமாளிக்கலாம். இவ்வாறு பயன்படுத்துவதால், தலைமுடியில் தோன்றும் முட்டை வாசனை பலருக்கும் பிடிக்காது. இந்த வாசனையிலிருந்து விடுபட விரும்புபவர்கள் முட்டை ஹேர் மாஸ்க்கில் சிறிது எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Split Ends Tips: நுனி முடி வெடிப்புக்கு இனி குட்பை சொல்லுங்க! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

தேங்காய் எண்ணெய்

முடி வறட்சி, முடி உதிர்தல், பொடுகு மற்றும் முடி பிளவு முனை போன்ற பல பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் சிறந்த எண்ணெயாக தேங்காய் எண்ணெய் கருதப்படுகிறது. இது முடி பிளவு முனையைத் தவிர்க்க பெரிதும் உதவுகிறது. இதற்கு தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தேங்காய் எண்ணெயைக் கொண்டு 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்து 2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு இரண்டு மணி நேரம் வைத்திருக்கும் போது உச்சந்தலை மற்றும் முடியின் வேர்கள் அனைத்தும் ஈரப்பதம் அடையும் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி விடும். 2 மணி நேரத்திற்குப் பிறகு லேசான க்ளென்சர் மூலம் கழுவி விடலாம்.

தயிர்

தலைமுடிக்கு ஆரோக்கியத்தில் உணவுப்பொருளான தயிர் முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு புதிய தயிரை எடுத்துக் கொண்டு உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் வைத்து பிறகு ஷாம்பூ கொண்டு கழுவி விடலாம். இதன் மூலம் இறந்த முடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைத்து விடும். எனினும், குளிர்சாதனப்பெட்டியிலிருந்து நேரடியாக தயிரை எடுத்துத் தலைமுடிக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், மூளை உறைதலுக்கு வழிவகுக்கலாம்.

தேன்

தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனராக தேன் செயல்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி பிளவு முனை பிரச்சனைக்கு மிகவும் ஏதுவாக அமைகிறது. இவ்வாறு இறந்த முடிக்கு தேன் பயன்படுத்துவது, அது இறந்த முடியை உயிர்ப்பித்து, கூடுதல் கவர்ச்சி மற்றும் பளபளப்பைத் தருகிறது. தேனுடன், தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து ஹேர் மாஸ்க் தயாரித்து தலைமுடியில் தடவி 25 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதன் பிறகு, லேசான ஷாம்பூ கொண்டு கழுவி விடலாம்.

இந்த வகை பொருள்களைக் கொண்டு முடி பிளவு முனையை எளிதில் தவிர்க்கலாம். எனினும், தலைமுடிக்கு புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன்னதாக, பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. இதன் மூலம் எரிச்சல், அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Split Ends Removing Tips: நுனி முடி பிளவில் இருந்து விடுபட இந்த டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.

Image Source: Freepik

Read Next

Itchy Scalp Remedies: உச்சந்தலை அரிப்பால் அவதியா? இந்த ஐந்து பொருள்கள் போதும்!

Disclaimer