$
How To Make Hair Mask For Curly Hair: முடி பராமரிப்பு என்பது முடி ஆரோக்கியத்தைப் பராமரிப்பதைக் குறிக்கிறது. இதில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக அமைவது சுருள் முடி பிரச்சனையாகும். இந்த சூழ்நிலையில், முடி உதிர்தல், முடி வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளும் அஹிகரிக்கிறது. சுருள் முடிக்கு ஏற்றவாறு பல்வேறு பொருள்கள் சந்தையில் கிடைக்கிறது. ஆனால், சில நேரங்களில் இந்த தயாரிப்புகளின் அதிகப்படியான பயன்பாடு முடிக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும், இதனால் விரும்பிய முடிவுகளை அடைய முடியாமல் போகலாம்.
இந்த சூழ்நிலையில், வீட்டிலேயே சில இயற்கையான பொருள்களைக் கையாள்வதன் மூலம், இயற்கையான முடி ஆரோக்கியத்தைப் பெறலாம். அதன் படி, சுருள் முடிக்கு சில இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் தயாரிக்கப்படுகிறது. இந்த வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதால், முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும், வலுவாகவும் மாற்ற முடியும். இந்த ஹேர்மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், கூந்தலின் உட்புறத்திற்கு ஊட்டமளிக்கப்படுகிறது. இதில் தலைமுடிக்கு எந்த வகையான ஹேர்மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fenugreek Oil For Hair: ஒன்றா இரண்டா பல நன்மைகளை அள்ளித் தரும் வெந்தய எண்ணெய்! எப்படி தயாரிப்பது?
சுருள் முடிக்கு உதவும் ஹேர் மாஸ்க்குகள்
தேங்காய் எண்ணெய் மற்றும் அலோவேரா
தேவையானவை
- தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
எவ்வாறு பயன்படுத்துவது
- தேங்காய் எண்ணெய் மற்றும் அலோ வேரா ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு, முதலில் பாத்திரம் ஒன்றில் அனைத்து பொருட்களையும் கலந்து கலவையை தயார் செய்ய வேண்டும்.
- பின் இந்த கலவையை தலைமுடியில் 20 நிமிடங்கள் தடவ வேண்டும்.
- அதன் பிறகு தலைமுடியை தண்ணீரில் அலச வேண்டும்.
- இந்த ஹேர்மாஸ்க் பயன்பாடு முடி உதிர்வு பிரச்சனையைக் குறைத்து, முடியை பலப்படுத்தலாம்.

முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஹேர் மாஸ்க்
தேவையானவை
- முட்டை - 1
- ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
தயாரிப்பது எப்படி
- இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு, முதலில் இந்த பொருள்கள் அனைத்தையும் நன்கு கலந்து கலவையை தயார் செய்ய வேண்டும்.
- பிறகு இந்தக் கலவையை தலைமுடியில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.
- அதன் பிறகு, தலைமுடியை தண்ணீரில் கழுவி விடலாம்.
- இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது முடிக்கு பிரகாசத்தை மேம்படுத்துவதாகவும், ஊட்டமளிப்பதாகவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Gel For Hair: பட்டு போன்ற மென்மையான முடிக்கு ஆளிவிதை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க
வாழைப்பழம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
தேவையானவை
- பிசைந்த வாழைப்பழம் - 1
- தேன் - 2 தேக்கரண்டி
- தயிர் - 2 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
பயன்படுத்துவது எப்படி
- இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்ய, முதலில் அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு இந்தக் கலவையை முடியின் வேர்கள் மற்றும் முடி நுனிகளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.
- பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவி விடலாம்.
- இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடிக்கு பயன்படுத்துவது சேதமடைந்த முடியை சரிசெய்து கூந்தலை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

இந்த இயற்கையான ஹேர் மாஸ்க்குகளைத் தலைமுடியில் பயன்படுத்தலாம். எனினும், இந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Clove Oil for Hair: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மாயாஜால எண்ணெய்! வெறும் இரண்டே பொருள்கள் போதும்
Image Source: Freepik