Saffron Benefits For Skin Whitening: கோடைக்காலத்தில் சரும பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் வெப்பம் அதிகரிப்பதால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சருமத்தை ஆரோக்கியமாக வைக்க பலரும் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதன் படி, கோடைக்காலத்திலும் சருமத்தைப் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைக்க குங்குமப்பூ உதவுகிறது.
குங்குமப்பூ அதன் மருத்துவ குணங்கள் மற்றும் சமையல் பயன்பாடுகளுக்கு மிகவும் புகழ்பெற்றதாகும். கோடை மாதங்களில் இயற்கையான சரும பராமரிப்பைப் பெற விரும்புபவர்கள் சருமத்தை பராமரிக்க குங்குமப்பூவை பயன்படுத்தலாம். இதில் சரும பொலிவுக்கு குங்குமப்பூ தரும் ஆரோக்கிய நன்மைகளையும், இதை எவ்வாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Ubtan: சருமத்தைப் பொலிவாக்கும் உப்டான். வீட்டிலேயே ஈஸியா இப்படி தயார் செய்யலாம்
கோடையில் சரும பொலிவுக்கு குங்குமப்பூ தரும் நன்மைகள்
கோடைக்காலத்தில் சருமத்திற்கு குங்குமப்பூவை பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
நீரேற்றமிக்க குங்குமப்பூ
குங்குமப்பூ சருமத்தின் நிறைந்திருக்கும் ஈரப்பதத்தை சமநிலையில் இருக்குமாறு பராமரிக்கிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் அதிகப்படியான வறட்சி அல்லது எண்ணெய் தன்மையை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க சருமத்திற்கு குங்குமப்பூவை பயன்படுத்தலாம்.
சருமம் பொலிவு பெற குங்குமப்பூ
சிறிதளவு தண்ணீரில் குங்குமப்பூவின் சில இழைகள் சேர்த்து ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதை அடுத்த நாள் குடிப்பது புத்துணர்ச்சியையும், ஈரப்பதத்தையும் தருகிறது. மேலும் இது உடலை நீரேற்றமாக வைப்பதுடன், சருமத்தை உள்ளிருந்து இயற்கையான பளபளப்பை ஊக்குவிக்கிறது.
சருமத்தின் கறைகளை நீக்க
குங்குமப்பூவில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை கோடையில் சூரிய ஒளியில் ஏற்படும் பழுப்பு மற்றும் நிறமியைக் குறைக்க உதவுகிறது.
கரும்புள்ளிகள் மறைய
குங்குமப்பூ இழைகளை பால் அல்லது தயிருடன் சேர்த்து ஃபேஸ்பேக்கைத் தயார் செய்யலாம். இந்த கலவையை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு வைக்க வேண்டும். இதன் வழக்கமான பயன்பாடு கரும்புள்ளிகளை ஒளிரச் செய்வதுடன், சருமத்தின் நிறத்தை சமன் செய்ய உதவுகிறது.
புறஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க
குங்குமப்பூவில் குரோசெடின் மற்றும் குரோசின் போன்ற கலவைகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
சுருக்கங்களை நீக்க
முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை எதிர்த்துப் போராட குங்குமப்பூ உதவுகிறது. எனவே சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற முதுமை அறிகுறிகளைப் போக்க குங்குமப்பூவை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Skin Tan Remedies: வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் கறையா? இந்த வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க
சருமத்திற்கு குங்குமப்பூவை பயன்படுத்துவது எப்படி?
சருமத்தை பளபளப்பாக வைக்க குங்குமப்பூவை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
தயிர் மற்றும் குங்குமப்பூ ஃபேஸ் பேக்
தேவையானவை
- தயிர் - 1 டீஸ்பூன்
- தேன் - 2 சொட்டு
- குங்குமப்பூ - சிறிதளவு
- எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
தயிர் குங்குமப்பூ ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
- முதலில் கிண்ணம் ஒன்றில் குங்குமப்பூவுடன் தேன், தயிர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்த்து கலவையாக தயார் செய்ய வேண்டும்.
- பின்பு, இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.
- பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவி விடலாம்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
குங்குமப்பூ மற்றும் பாலாடை ஃபேஸ் பேக்
தேவையானவை
- குங்குமப்பூ - சிறிதளவு
- பாலாடை - சிறிதளவு
பாலாடை குங்குமப்பூ ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி?
- முதலில் பாலாடையை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு, இதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இந்த கலவையை மதிய நேரத்தில் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வரை வைக்க வேண்டும்.
- அதன் பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் பொலிவாகலாம்.

குங்குமப்பூ கொண்டு தயார் செய்யப்படும் இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு சிறந்த நன்மைகளைத் தருகிறது. இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தி சருமத்தைப் பொலிவாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Face Pack: சருமத்தை பொலிவாக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்! இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik