Summer Skin Care Tips: கோடைக்காலத்தில் சருமத்தை அழகாக்க உதவும் பழங்கள். கட்டாயம் சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Summer Skin Care Tips: கோடைக்காலத்தில் சருமத்தை அழகாக்க உதவும் பழங்கள். கட்டாயம் சாப்பிடுங்க

சருமத்தைப் பொலிவாக்க உதவும் பழங்கள்

பழங்களை எடுத்துக் கொள்வது உடல் மற்றும் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நிறைந்துள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இயற்கையான பராமரிப்பை வழங்குகிறது. இதில் கோடைக்காலத்தில் சரும பராமரிப்பிற்கு உதவும் பழங்களைக் காணலாம்.

மாம்பழம்

கோடைக்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்களில் ஒன்று மாம்பழம் ஆகும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சி போன்றவை சருமத்தில் கொலாஜனை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இதன் பொட்டாசியம், வைட்டமின் ஈ போன்றவை சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் விளைவுகளைக் கொண்டுள்ளது. எண்ணெய் மற்றும் முகப்பரு கொண்ட சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இதன் பீட்டா கரோட்டீன் சருமத்தை பாக்டீரியா மற்றும் நச்சுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mango For Skin: கோடையிலும் முகம் சும்மா ஜொலி,ஜொலிக்க… மாம்பழத்தை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

ஆப்பிள்கள்

இதில் பினாலிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை புறஊதாக் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறந்த முதுமை எதிப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சரும ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது.

பப்பாளி

கோடைக்காலத்தில் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று. இதில் பப்பெய்ன் என்ற நொதி நிறைந்துள்ளது. இவை இறந்த சரும செல்களை நீக்கி படிப்படியாக சருமத்தின் நிறத்தை சீராக வைக்க உதவுகிறது. பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே, மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவை உள்ளது. இது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும், நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.

பெர்ரி

பெர்ரி பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், முதுமை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. பெர்ரி வகைகளில் வைட்டமின் ஏ, பி, ஈ, மற்றும் கே சத்துக்கள் உள்ளது. இது சருமத்திற்கு சீரான மற்றும் பளபளப்பான நிறத்தை ஊக்குவிக்கிறது. அனைத்து பெர்ரி வகைகளும் சருமத்திற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தருவதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: Watermelon Seeds Benefits: முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் தர்பூசணி விதை. இப்படி யூஸ் பண்ணுங்க

தர்பூசணி

கோடைக்காலத்தில் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் லைகோபீன்கள் ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதன் வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தில் கொலாஜனை ஊக்குவிக்கிறது. தர்பூசணியில் உள்ள பீட்டா கரோட்டீன் சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

எலுமிச்சை

கோடையில் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும் பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. இதில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது சருமத்தைத் தெளிவாக்கி முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது.

வாழைப்பழங்கள்

கோடையில் பளபளப்பான சருமத்திற்கு ஏற்ற பழங்களில் வாழைப்பழம் நல்ல தேர்வாக அமைகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனுடன் பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த சிறந்த மூலமாகும். இது காயங்கள் மற்றும் முகப்பரு தழும்புகளைக் குறைக்க உதவுகிறது.

இவை அனைத்தும் கோடையில் பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் பழங்களாகும். எனினும் அனைவரின் உடல்நலத்திற்கு ஏற்ப பழங்களை எப்படி, எவ்வளவு உட்கொள்ள வேண்டும் மற்றும் எப்படி சருமத்திற்கு நன்மையளிக்கும் என்பது குறித்து தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Papaya For Skin: சரும அரிப்பால் அவதியா? பப்பாளிப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Papaya Peel: பப்பாளி தோலை இப்படி யூஸ் பண்ணுங்க; ஒரு வாரத்தில் முகம் பளபளக்கும்!!

Disclaimer