Tips To Get Rid Of Ringworm: பப்பாளி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி பழத்தைப் பல்வேறு வழிகளில் சரும பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தலாம். பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, மற்றும் டி, புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. அந்த வகையில் சரும பிரச்சனைகளான படர் தாமரை, அரிப்பு மற்றும் சிரங்கு போன்றவற்றிலிருந்து விடுபடவும் பப்பாளி உதவுகிறது.
ஆயுர்வேதத்தில் படர்தாமரை, சிரங்கு, அரிப்பு குணப்படுத்தும் முறை
உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படக்கூடிய ஒரு பூஞ்சை தொற்றே படர் தாமரை ஆகும். இது வேகமாகப் பரவக்கூடிய தொற்று நோயாகும். இந்த சூழ்நிலையில் படர் தாமரை, அரிப்பு மற்றும் சிரங்கு போன்றவற்றிலிருந்து விடுபட ஆயுர்வேத முறையைக் கையாளலாம்.
இது குறித்து சிறுநீரக கல்லீரல் நிபுணர் டாக்டர். குர்சேவக் சிங் அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதிலிருந்து விடுபட பப்பாளியைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சரும பிரச்சனைகளைத் தவிர்க்க பப்பாளியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skin Glowing Tips: ஹீரோயின் மாறி பளபளப்பான சருமத்திற்கு காலை நேரத்துல இதெல்லாம் செய்யுங்க
படர்தாமரை, சிரங்கு, அரிப்புக்கு பப்பாளி பயன்படுத்தும் முறை
இந்த சரும பிரச்சனைகளிலிருந்து விடுபட பப்பாளி சாற்றைப் பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தின் சாற்றை எடுத்து உடலின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். அதன் படி, பப்பாளி சாற்றை படர் தாமரை, அரிப்பு மற்றும் சிரங்கு உள்ள பகுதியில் தினமும் தடவலாம். இவ்வாறு தடவி வர, ஒரே வாரத்தில் முடிவுகளைப் பார்க்கலாம்.
சருமத்தில் பப்பாளி தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
தோல் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பப்பாளி மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பப்பாளி ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த பழமாகும். இவை சரும பாதிப்பை தடுப்பதுடன், சரும பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
மேலும் இது சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைக்கப்படுகிறது. மேலும், இது பருக்களை நீக்க உதவுகிறது. இதனுடன், முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளான படர் தாமரை, அரிப்பு மற்றும் சிரங்கு போன்றவற்றிலிருந்து விடுபட இந்த தீர்வை ஒரு முறை முயற்சி செய்யலாம். எனினும், சருமம் உணர்திறன் மிக்கதென்பதால் புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன் தோல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Watermelon Seeds Benefits: முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் தர்பூசணி விதை. இப்படி யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik