Glowing Skin Fruits: முதுமையிலும் இளமை பெற இந்த ஃபுரூஸ் சாப்பிடுங்க!

  • SHARE
  • FOLLOW
Glowing Skin Fruits: முதுமையிலும் இளமை பெற இந்த ஃபுரூஸ் சாப்பிடுங்க!

எனவே பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே, நம் வீட்டிலேயே சில எளிய முறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும். இது உடல்நலப் பிரச்சனைகள் மட்டுமல்ல. சரும பிரச்சனைகளையும் தரக்கூடியதாக அமைகிறது. அதாவது இளமை வயதிலேயே முதுமையை அடைவதாகும். வறண்ட சருமம், தோல் சுருங்குதல், சரும வெடிப்பு, நேர்த்தியான கோடுகள் போன்றவை அடங்கும். எனினும், இளம் வயதில் சில வகையான பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்

சரும ஆரோக்கியத்தில் பழங்கள்

சருமத்தைப் பளபளப்பாக வைக்க ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்களை நேரடியாகவோ உட்கொள்ளலாம் அல்லது சருமத்தில் நேரடியாக பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம். இதில் சருமத்தைப் பளபளப்பாக்க எந்தெந்த பழங்களை உட்கொள்ளலாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Urad Dal Face Pack: சருமத்தைப் பொலிவாக்க உளுந்துவுடன் இந்த பொருள்களைச் சேர்த்து யூஸ் பண்ணுங்க

சரும ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய பழங்கள்

சருமத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமாக வைக்கவும் சில வகையான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் சரும ஆரோக்கியத்திற்கு என்னென்ன பழங்களைக் காணலாம்.

ஆப்பிள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு வகையான உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள பினாலிக் அமிலம் சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ஆப்பிளைப் பொறுத்த வரை, ஆக்ஸிஜனேற்றத்தின் அதிக செறிவு ஆப்பிளின் தோலில் காணப்படுகிறது. எனவே ஆப்பிள் வாங்கும் போது ஆர்கானிக் பழங்களாக வாங்க பரிந்துரைக்கப்படுகிறது.

பப்பாளி

பப்பாளி அதன் உரித்தல் மற்றும் ஒளிரும் பண்புகளுக்கு மிகவும் நன்கு அறியப்பட்டதாகும். பப்பாளியில் பப்பைன் என்ற நொதி காணப்படுகிறது. இது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நிறத்தை படிப்படியாக சீராக வைக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது சருமத்தின் ஈரப்பதம், நெகிழ்ச்சி மற்றும் உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. பப்பாளி பழத்தை உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதுடன், முதுமை எதிர்ப்புப் பண்புகளையும் தருகிறது. இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், புத்துணர்ச்சியூட்டும் தன்மையைத் தருகிறது.

மாம்பழம்

இது கொலாஜன் உருவாவதை ஊக்குவிக்க உதவும் வைட்டமின் ஏ மற்றும் சி ஊட்டச்சத்துக்களை கணிசமான அளவு கொண்டுள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை சிறந்த ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனினும் முகப்பரு உள்ளவர்களுக்கு மாம்பழம் போன்ற சர்க்கரை பழங்கள் பொருத்தமாக இருக்காது என நினைப்பர். உண்மை என்னவெனில், மாம்பழம் உண்மையில் எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புள்ள சருமங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் மாம்பழத்தில் வைட்டமின் பி 6 மற்றும் மெக்னீசியம் போன்றவை சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் பீட்டா கரோட்டீன் சருமத்தை பாக்டீரியா மற்றும் நச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. பழத்தில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இதயம், கண்கள், முடி பராமரிப்பு மற்றும் செரிமான அமைப்பு போன்றவற்றிற்கு சிறந்ததாக அமைகிறது. இது மற்ற பழங்களை விட அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Alum for Skin: சும்மா பளபளன்னு சருமம் மின்னணுமா? படிகாரத்தை 3 வழிகளில் யூஸ் பண்ணி பாருங்க

தர்பூசணி

தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவை நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவக்கூடிய இயற்கை ஆக்ஸிஜனேற்றிகளாகும். ஃப்ரீ ரேடிக்கல்கள் சரும ஆக்ஸிஜனேற்றத்தை ஏற்படுத்துகிறது மற்றும் தோல் வயதான செயல்முறைகளை துரிதப்படுத்துகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைத் தவிர வைட்டமின் சி சத்துக்கள் லாஜனின்  தொகுப்பை ஊக்குவிக்கிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது.

இதன் வைட்டமின் ஏ சத்துக்கள், சருமத்தை சரி செய்து புதுப்பிக்கிறது. மேலும் இது ஆரோக்கியமானதாகவும், பிரகாசமாகவும் வைக்க உதவுகிறது. இதிலுள்ள பீட்டா கரோட்டீன் தடிப்புத் தோல் அழற்சியைத் தடுக்க உதவுகிறது. தர்பூசணியில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தர்பூசணியில் குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் அதிகளவு தண்ணீர் உள்ளது. இது உடல் எடையிழப்புக்கு பங்களிக்கிறது.

பெர்ரி

பெர்ரியில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தளவிலான கலோரிகளும், அதிகளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது சரும ஆரோக்கியத்தில் மிகவும் நன்மை தருகிறது. இதில் மற்ற பழங்களை விட அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கிறது. அதன் படி அவுரிநெல்லிகள் மற்றும் லிங்கன்பெர்ரி போன்ற பெரும்பாலான பெர்ரி வகைகளில் வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் கே போன்றவை உள்ளது. மேலும் கிரான் பெர்ரிகளில் அதிக அளவு வைட்டமின் ஈ மற்றும் கே உள்ளது. மற்ற பெர்ரி வகைகளில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. இவை சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வகை பழங்கள் அனைத்துமே சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Powder Benefits: சருமம் மென்மையா, பளிச்சினு இருக்க தேங்காய் பவுடரை இப்படி பயன்படுத்துங்க!

Image Source: Freepik

Read Next

Monsoon Skincare: மாறி வரும் வானிலை… சருமத்தில் இந்த மாற்றங்களை செய்யவும்..

Disclaimer