Fruits On Empty Stomach: பழங்கள் ஆரோக்கியமான உணவு. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பழங்களில் உள்ள முழு பலன்களையும் அடைய, அதற்கான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அப்படி எந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்? அதனால் என்ன பயன்? இதற்கான விளக்கத்தை இங்கே விரிவாக காண்போம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது எளிதில் ஜீரணமாகிவிடும். இதில் உள்ள இயற்கையான சர்க்கரை, உங்களின் ஆற்றலை அதிகரிக்க உதவும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தர்பூசணி

தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடல் நீரேற்றமாக இருக்கும். குறிப்பாக உங்கள் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய உதவும். இதில் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
பப்பாளி
பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் வயிறு சார்ந்த பிரச்னைகள் நீங்குகின்றன. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஃபோலேட் போன்றவை நிறைந்துள்ளன. இது உங்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் தோல் சார்ந்த பிரச்னைகளை தீர்க்கிறது.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடக்கூடிய 5 பழங்கள் இங்கே..
பெர்ரி
பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. அறிவாற்றல் மற்றும் இதய ஆரோக்கிய நலன்களுக்காக இதனை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
ஆரஞ்சு

ஆரஞ்சு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். அவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். குறிப்பாக இது உங்கள் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி, நிறைவான உணர்வை ஊக்குவிக்கும். ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரைகள் நிலையான ஆற்றலை வெளியிடுகின்றன.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகளை பெறலாம். இருப்பினும் சிலருக்கு இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனை தவிர்க்க, மேற்கூறிய பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
Image Source: Freepik