$
Benefits of Cleansing Face with Multani Mitti in Winters: குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் தவிர சரும பிரச்சினைகளும் அதிகரிக்கும். சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், குளிர்காலத்தில் வீசும் வறண்ட காற்றினால் சருமம் வறண்டு களையிழந்து காணப்படும். அதுமட்டும் அல்ல பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் பிரச்சினைகளும் ஏற்படும். எனவே, குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நம்மில் பலர் சரும பராமரிப்பில் முல்தானி மிட்டியை பயன்படுத்துவோம். குளிர்காலத்தில் முல்தானி மிட்டி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது ங்களுக்கு தெரியுமா? முல்தானி மிட்டி மூலம் முகத்தை சுத்தம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Pimple Solution: மீண்டும் மீண்டும் முகப்பரு வருகிறதா? இதை சரிசெய்ய வழிகள்!
குளிர்காலத்தில் முல்தானி மிட்டி பயன்படுத்துவதன் நன்மைகள்
சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும்
முல்தானி மிட்டி ஒரு சிறந்த மாசு நீக்கி. இது முகத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. குளிர்காலத்தில் முல்தானி மிட்டியைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்தால், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் தூசு அனைத்தையும் எளிதில் நீக்கிவிடும். முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றவும் உதவுகிறது.
சருமத்தை தெளிவாக்கும்
குளிர்காலத்தில் முல்தானி மிட்டி கொண்டு முகத்தை சுத்தம் செய்தால், சருமத்தில் படிந்திருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் நீங்கும். முல்தானி மிட்டியில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மை உள்ளது. எனவே, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முல்தானி மிட்டி மூலம் முகத்தை சுத்தம் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Anti Aging Drinks: 40 வயதிலும் 20 வயது பெண் போல இளமையா இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்க!
முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபட
உங்கள் முகத்தில் வெடிப்பு அல்லது முகப்பரு பிரச்சினை இருந்தால், உங்கள் முகத்தை சுத்தம் செய்ய முல்தானி மிட்டியைப் பயன்படுத்தலாம். முல்தானி மிட்டியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முகப்பருவை தடுக்க உதவுகிறது. இது தவிர, முல்தானி மிட்டி அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் குறைக்கிறது. இது முகப்பரு மற்றும் பருக்கள் பிரச்சனையை நீக்குகிறது. அதுமட்டுமின்றி, முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் புள்ளிகளை நீக்குகிறது.
சருமத்தை பளபளப்பாக்கும்
முல்தானி மிட்டி சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உங்கள் சருமம் மந்தமாகவும், உயிரற்றதாகவும் இருந்தால், அதை பளபளப்பாக மாற்றலாம். முல்தானி மிட்டி சருமத்திற்கு சீரான நிறத்தை கொடுக்க உதவுகிறது. இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். குளிர்காலத்தில் முல்தானி மிட்டியால் முகத்தை அடிக்கடி சுத்தம் செய்து வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Curd Face Pack: தயிர் போன்ற பளபளப்பான சருமத்திற்கு தயிரை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.
கூடுதல் எண்ணெயை நீக்கும்
உண்மையில், குளிர்காலத்தில் தோல் வறண்டுவிடும். ஆனால், சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும். இந்நிலையில் முல்தானி மிட்டியால் முகத்தை சுத்தம் செய்தால் பலன் கிடைக்கும். முல்தானி மிட்டி சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது. இது சருமத்தின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வெடிப்புகளைத் தடுக்கிறது.
Pic Courtesy: Freepik
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.