Doctor Verified

Multhani Mitti Benefits: சருமத்திற்கு 4000 வருட பழமையான இயற்கை பியூட்டி ரகசியம்

Multhani Mitti Benefits in Tamil: முல்தானி மட்டியின் மருத்துவ குணங்கள் என்ன? எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைவரும் பயன்படுத்தலாமா? டாக்டர் கார்த்திகேயன் விளக்கும் 4000 வருட பழமையான பேஸ்பேக் முறை.
  • SHARE
  • FOLLOW
Multhani Mitti Benefits: சருமத்திற்கு 4000 வருட பழமையான இயற்கை பியூட்டி ரகசியம்

சருமப் பராமரிப்பில் இன்று ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஸ்கின் கேர் பொருட்களை வாங்குகிறோம். ஆனால், நம் வீட்டிலேயே கிடைக்கும்மிக எளிமையான – மிக சக்திவாய்ந்த ஒரு பொருளின் அருமையை நாம் மறந்து விட்டோம். அதுதான் முல்தானி மட்டி. “இன்றைய நவீன ஸ்கின் கேர் தயாரிப்புகளில் கூட, முல்தானி மட்டியில் இயற்கையாக உள்ள சில மூலக்கூறுகளை சேர்க்க முடியவில்லை” என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார்.


முக்கியமான குறிப்புகள்:-


முல்தானி மட்டியின் வரலாறு

முல்தான் என்னும் கிராமத்தில் கிடைக்கும் ஒரு வகை களிமண் தான் முல்தானி மட்டி. பெரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்திலேயே, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து, பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற மண் இது.

ஆராய்ச்சி சொல்வது என்ன?

2019-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வுகள், முல்தானி மட்டியில் உள்ள வியக்கத்தக்க மருத்துவ குணங்களை வெளிச்சம் போட்டன. இதில் உள்ள முக்கிய மூலக்கூறுகள்:

  • Magnesium Oxide: சருமம் தொங்காமல், ஸ்கின்னை இறுக்கமாக வைத்திருக்கும்.
  • Iron Oxide: சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இயற்கையான க்ளோ கிடைக்க உதவும்.
  • Calcium Bentonite: ஸ்கின்னில் உள்ள நச்சுகளை வெளியேற்றும், சருமத்தை டீடாக்ஸ் செய்யும்
  • Silica: கொலாஜன் உற்பத்தியை தூண்டும், வயது முதிர்வு அறிகுறிகளை தள்ளிப்போடும்.

முல்தானி மட்டியின் மிகப்பெரிய அதிசயம்

முல்தானி மட்டியின் அற்புதமான தன்மை என்ன தெரியுமா? சருமத்தில் எது தேவையில்லாத எண்ணெய் (Excess Sebum), எது சருமத்திற்கு தேவையான ஹெல்தி ஆயில் என்று தானாகவே பிரித்தெடுக்கும் அறிவு இதற்கு இருக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: முகம் தங்கம் போல ஜொலிக்க முல்தானி மெட்டியில் இந்த 5 பொருள்களை மட்டும் சேர்த்து யூஸ் பண்ணுங்க

“ஆயில் ஸ்கின் மட்டுமே பயன்படுத்தலாம்” – வதந்தி!

பல ஆண்டுகளாக ஒரு நம்பிக்கை, முல்தானி மட்டி ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு மட்டுமே நல்லது டிரை ஸ்கின் உள்ளவர்கள் பயன்படுத்தினால் சருமம் வறண்டு போகும். இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.

ஒரிஜினல் முல்தானி மட்டியை எப்படித் தேர்வு செய்வது?

கலப்படமில்லாத முல்தானி மட்டி Beige கலரில் இருக்கும். மிக அதிகமாக வெள்ளையாக இருந்தால், ரசாயன ப்ளீச்சிங் செய்யப்பட்டிருக்கலாம்.

பேட்ச் டெஸ்ட் அவசியம்

எந்த இயற்கை பொருளும் சிலருக்கு அலர்ஜி தரலாம். பேட்ச் டெஸ்ட் முறை:

* முல்தானி மட்டியை நீர் / ரோஸ் வாட்டரில் கலந்து, மணிக்கட்டு அல்லது கழுத்தின் பின்புறம் தடவி, இரவு முழுவதும் விட்டு விடுங்கள்.

* காலையில் சிவப்பு, எரிச்சல், அரிப்பு இல்லையெனில் பயன்படுத்தலாம்.

டாக்டர் கார்த்திகேயன் கூறும் 4000 வருட பழமையான முல்தானி மட்டி பேஸ்பேக்

தேவையான பொருள்கள்:

  • முல்தானி மட்டி – 2 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
  • தேன் (ஒரிஜினல்) – 1 ஸ்பூன்
  • வேப்ப எண்ணெய் – 3 துளிகள்
  • மஞ்சள் – 1 சிட்டிகை

செய்முறை:

  • மர / கண்ணாடி பௌலில் மட்டும் கலக்க வேண்டும்
  • பிளாஸ்டிக் அல்லது சில்வர் பாத்திரம் வேண்டாம்
  • டேப் வாட்டர் பயன்படுத்தக் கூடாது
  • அனைத்தையும் சேர்த்து ஸ்மூத்தான பேஸ்ட்டாக கலக்கவும்.

பயன்படுத்தும் முறை:

  • கழுத்தில் இருந்து மேல்நோக்கி முகத்தில் அப்ளை செய்யவும்.
  • 20–25 நிமிடம் விடவும்
  • வெதுவெதுப்பான நீரில், அதே திசையில் கழுவவும்
  • உடனடியாக முகத்தில் பளபளப்பு தெரியும்
  • வாரத்திற்கு 2 முறை போதும்

இறுதியாக..

₹50-ல் கிடைக்கும் முல்தானி மட்டி, ₹5000 ஸ்கின் கேர் பொருட்களுக்கே சவால் விடும் சக்தி கொண்டது. சரியான முறையில், சுத்தமான பொருள்களுடன் பயன்படுத்தினால், எந்த சருமத்திற்கும் பாதுகாப்பான, பயனுள்ள ஒரு இயற்கை ஸ்கின் கேர் ரகசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை, பொது தளங்களில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் நிபுணர் மருத்துவர் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள முறைகளை நீங்கள் பின்பற்றுவதற்கு முன், உங்கள் டெர்மடாலஜிஸ்ட் அல்லது உடல்நல நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.

Read Next

Chemical Shampoo வேண்டாம்.! பூந்திக்காய் போதும்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 16, 2025 23:25 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்