Fri Sep 11, 2026 | 11:43 PM IST

Doctor Verified

Chemical Shampoo வேண்டாம்.! பூந்திக்காய் போதும்..

முடி உதிர்வு, பொடுகு தொல்லைக்கு இரசாயன ஷாம்பூவுக்கு மாற்றாக பூந்திக்காய் பயன்படுத்தலாமா? இயற்கை முடி பராமரிப்பு குறித்து மருத்துவர் சிவராமன் கூறும் ஆலோசனைகள்.

தற்போதைய வாழ்க்கைச் சூழலில், முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி மெலிதாகுதல் போன்ற பிரச்சனைகள் பெரும்பாலானவர்களை பாதித்து வருகின்றன. வாழ்க்கை முறை மாற்றம், தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் மாசுபாடு ஆகியவை இதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக, பலரும் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த ஷாம்பூக்களில் உள்ள இரசாயனங்கள் நீண்ட காலத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பூவுக்கு மாற்றாக பூந்திக்காய் – மருத்துவர் சிவராமன் ஆலோசனை

இயற்கை முறையில் முடி பராமரிப்பை விரும்புவோருக்கு,
பூந்திக்காய் ஒரு சிறந்த மாற்றாக இருக்க முடியும் என தெரிவிக்கிறார் மருத்துவர் சிவராமன். அவர் கூறுவதாவது, “பூந்திக்காயை அரைத்து நன்றாக பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனை தலைக்கு தேய்த்து குளித்தால், முடியில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் இயற்கையாகவே நீங்கும்.”

நுரை வராதால் சுத்தம் ஆகாதா?

பூந்திக்காயைப் பயன்படுத்தும்போது, ஷாம்பூ போல அதிக நுரை வராது. இதுகுறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில், “அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்பது தவறான நம்பிக்கை. நுரை இல்லாமலே அழுக்குகளை நீக்கும் சக்தி பூந்திக்காய்க்கு உள்ளது” என்றார். அதிக நுரை தரும் பொருட்கள், முடியின் இயற்கை எண்ணெய் அடுக்கை அகற்றிவிடும், முடியை வறட்சியாக மாற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவும் உதவலாம்: கெமிக்கல் ஷாம்பூக்கு No.. தேங்காய் பால் ஷாம்பூக்கு Yes.. நீளமான மற்றும் அடர்த்தியான முடிக்கு சிறந்த ரகசியம்!

பூந்திக்காய் தரும் முக்கிய நன்மைகள்

  • முடியில் சேர்ந்துள்ள அழுக்குகளை மென்மையாக நீக்கும்
  • பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த உதவும்
  • முடி உதிர்வை குறைக்கும்
  • முடியின் இயற்கை எண்ணெய் சமநிலையை பாதுகாக்கும்

உடல் பராமரிப்புக்கும் இயற்கை தீர்வு

முடி மட்டுமல்ல, உடல் பராமரிப்பிற்கும் பாசிப்பருப்பு மாவை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இது சருமத்தில் சேர்ந்த அழுக்குகளை நீக்கும், இரசாயன சோப்புகளின் பக்கவிளைவுகளைத் தவிர்க்க உதவும்.

சீவக்காய் + பூந்திக்காய் = சிறந்த முடி சுத்தம்

சீவக்காய் மற்றும் பூந்திக்காயை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் போதுமானது என்றும் அவர் அறிவுறுத்துகிறார். முடி பராமரிப்பிற்கு இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஷாம்பூக்கள் அவசியம் இல்லை. நம் பாரம்பரிய இயற்கை முறைகளே போதுமானவை.

இறுதியாக..

முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைகளுக்கு, உடனடி தீர்வு தேடும் போது, இரசாயன பொருட்களிடம் செல்வதைவிட, பூந்திக்காய், சீவக்காய் போன்ற இயற்கை வழிமுறைகளை பயன்படுத்துவது, முடி ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க உதவும். இயற்கை முறைகள் மெதுவாக பலன் தரும். ஆனால் அவை பக்கவிளைவில்லாத பாதுகாப்பான தீர்வுகள் என்பதே முக்கியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை, பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை நீங்கள் கடைபிடிப்பதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

என்றும் இளமை சருமத்துடன் தோற்றமளிக்க உங்க டயட்ல இந்த 5 சூப் வகைகளைச் சேர்த்துக்கோங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 16, 2025 13:45 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content