Fri Sep 11, 2026 | 10:47 PM IST

Doctor Verified

டெயிலி யூஸ் பண்ண.. கெமிக்கல் இல்லாத ஷாம்பூ.! மருத்துவர் பரிந்துரை..

இரசாயனங்கள் இல்லாத இயற்கை ஷாம்பூவை வீட்டிலேயே தயாரிக்கலாம் என மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். வெந்தயம், நெல்லிக்காய், சீவக்காய், பூந்திக் கொட்டை சேர்த்து செய்யும் இந்த ஷாம்பூ முடி உதிர்வையும் ஒவ்வாமையையும் தடுக்கும்.

முடி பராமரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான அழகுக் கவனிப்பு. ஆனால், பெரும்பாலான ஷாம்பூக்களில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள் (Chemicals) தலைமுடியை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானவை. இதனால், சிலருக்கு ஒவ்வாமை, தலைச் சுருக்கு, முடி உதிர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இயற்கை, கெமிக்கல் இல்லாத ஷாம்பூ பற்றி மருத்துவர் கார்த்திகேயன் ஒரு எளிய முறையை பரிந்துரைத்துள்ளார்.

Video Link: https://youtu.be/uMqhDG4nx9w

இயற்கை ஷாம்பூ செய்வது எப்படி?

“நாம் கடையில் வாங்கும் ஷாம்பூக்களில் நிறைய கெமிக்கல் கலந்திருக்கும். அது முடி வேரை பலவீனப்படுத்தும். ஆனால் வீட்டிலேயே இயற்கை பொருட்களால் தயாரிக்கும் ஷாம்பூ, தலையின் இயல்பை காப்பாற்றும்” என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். அதன்படி, வீட்டில் உள்ள சில பொதுவான பொருட்களால் இந்த ஷாம்பூவை தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

* வெந்தயம் – 2 டீஸ்பூன்

* உலர்ந்த நெல்லிக்காய் – 4 அல்லது 5

* உலர்ந்த சீவக்காய் – 3

* பூந்திக் கொட்டைகள் – 5

தயாரிக்கும் முறை

* மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

* மறுநாள் காலை, அதே தண்ணீருடன் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

* சில நிமிடங்களில் அந்த நீரின் நிறம் மாறி ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறும்.

* அதனை அடுப்பிலிருந்து இறக்கி, குளிரவிட்டு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

இந்த இயற்கை ஷாம்பூ இரசாயனங்கள் இல்லாமல் இருப்பதால், தலைச் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

இந்த பதிவும் உதவலாம்: குளித்த பிறகு இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. உங்க முடி மற்றும் சருமம் பாதிக்கப்படலாம்

நன்மைகள்

* ஒவ்வாமை, தலைச் சுருக்கு, வறட்சி போன்ற பிரச்சனைகள் குறையும்.

* முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கும்.

* நெல்லிக்காய் மற்றும் சீவக்காய் சேர்க்கையால் முடி மென்மையாகவும் பிரகாசமாகவும் மாறும்.

* பூந்திக் கொட்டை தலையில் இயற்கையான எண்ணெய் சீரான உற்பத்தியை ஊக்குவிக்கும்.

* தினசரி பயன்படுத்தவும், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை.

இறுதியாக..

அழகு பொருட்களில் இரசாயனங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், இயற்கை வழியிலான முடி பராமரிப்பு தான் பாதுகாப்பானது. வெந்தயம், நெல்லிக்காய், சீவக்காய் போன்றவை தலைமுடிக்குத் தேவையான புரதம், வைட்டமின், ஆன்டி ஆக்சிடன்ட்களை வழங்குகின்றன. இந்த இயற்கை ஷாம்பூவை வாரத்தில் 2 முறை பயன்படுத்தினால், முடி வேர்கள் வலுப்பெற்று, ஆரோக்கியமான பிரகாசமான முடி கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தயாரிப்பு முறையைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது தலைமுடி நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம். ஒவ்வொருவரின் தலையின் இயல்பு வேறுபடும் என்பதால், தனிப்பட்ட ஆலோசனை அவசியம்.

Read Next

மாதவிடாய் காலத்தில் அதிகமாக முடி உதிர்வது இயல்பானதா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 27, 2025 20:12 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content