
முல்தானிமெட்டி என்பது தலைமுறைகள் கடந்தும் பெண்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தி வரும் இயற்கை அழகு மருந்து. இதன் முக்கிய அம்சங்கள் மெக்னீசியம் குளோரைடு (Magnesium Chloride) மற்றும் கால்சியம் பென்டோனேட் (Calcium Bentonite). இந்த இரண்டு ஊட்டச்சத்துக்கள் சேர்ந்து சருமத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி, முகப்பரு மற்றும் கருப்பு புள்ளிகளை மறையச் செய்து முகத்தை பொலிவுறச் செய்கின்றன.
மருத்துவர் மைதிலி கூறுவதாவது — "முல்தானிமெட்டி சருமத்துக்கான இயற்கை டிடாக்ஸாக (natural detox) செயல்படுகிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தினால், சருமம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்."
Video Link: https://youtu.be/itTWShe6dmo
முகப்பரு நீங்க முல்தானிமெட்டி மாஸ்க் செய்வது எப்படி?
முகப்பரு மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கான சிறந்த மாஸ்க் இதுவாகும்:
* ஒரு டீஸ்பூன் முல்தானிமெட்டி பொடி
* ஒரு டீஸ்பூன் சந்தனப் பொடி
* கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள்
* தேவையான அளவு ரோஸ் வாட்டர்
இந்த கலவையை நன்றாகக் குழைத்து முகத்தில் பேஸ் பேக் போல் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவவும்.
வாரத்துக்கு இரண்டு முறை இதை தொடர்ந்து 3 மாதங்கள் செய்தால், முகப்பரு மறைந்து முகம் இயற்கையாக பிரகாசிக்கும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
முகப்பொழிவுக்கான முல்தானிமெட்டி மாஸ்க்
முகம் மற்றும் கழுத்து பகுதியில் பொலிவை அதிகரிக்க விரும்புவோர்:
* ஒரு டீஸ்பூன் முல்தானிமெட்டி
* சிறிதளவு தயிர்
இவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் விட்டு கழுவ வேண்டும். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி, இறந்த செல்களை நீக்கி, ஒரே நிறத்துடன் பிரகாசமான முகத்தைக் கொடுக்கும். வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தினாலே போதுமானது.
சரும ஆரோக்கியத்துக்கு முல்தானிமெட்டி
சருமத்தில் சுருக்கம் அல்லது மங்கல் தோற்றம் உள்ளவர்களுக்கு முல்தானிமெட்டி சிறந்த கிருமிநாசினி. வாரத்துக்கு ஒருமுறை ரோஸ் வாட்டர் அல்லது தயிருடன் கலந்து முகத்தில் தடவலாம். இது சருமத்தின் இளமை தன்மையை பாதுகாக்கும். மேலும், சிறிய காயங்களை விரைவாக ஆற்றும் இயற்கை ஆற்றல் முல்தானிமெட்டியில் உள்ளது என மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
இறுதியாக..
முல்தானிமெட்டி இயற்கையாக சருமத்தை சுத்தப்படுத்தி, முகப்பரு, கருப்புப் புள்ளிகள், சுருக்கம் ஆகியவற்றை குறைக்கும் ஒரு சிறந்த நெய்ச்சுரல் மருந்தாகும். ஆனால், அதை அதிக அளவில் அல்லது தினசரி பயன்படுத்த வேண்டாம். சருமம் உலர்ந்தவர்களுக்கு ரோஸ் வாட்டர் விட தயிர் சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது.
Disclaimer: இந்தக் கட்டுரை பொது தளங்களில் வெளியிடப்பட்ட மருத்துவர் கருத்துகள் மற்றும் நிபுணர் ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் தோல் நிபுணர் அல்லது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 23, 2025 17:10 IST
Published By : Ishvarya Gurumurthy