தினமும் குளித்தால் உடல் நலத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? குளிப்பது நமது சுத்தத்திற்காக மட்டுமே என்று கருதப்படுகிறது. ஏதோ செய்தோம் என்ற பெயரில் சிலர் குளிக்கிறார்கள்.. ஆனால் உடல் மேலே தண்ணீர் பட்டதும், சோப்பை போட்டு கழுவிவிட்டு, காக்கா குளியல் போடுவது நல்லதல்ல.
நேரத்தை மிஞ்சப்படுத்துகிறேன் என்ற பெயரில் பலரும் இப்படித்தான் குளிக்கிறார்கள். ஆனால் குளிக்கும்போது உடலின் மூன்று பாகங்களை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அவை என்னவென்று பார்ப்போம்…

இதையும் படிங்க: Benefits of eating fruits: இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- குளித்தால் உடலில் உள்ள அனைத்து பாக்டீரியாக்கள் மற்றும் அசுத்தங்கள் அகற்றப்படும்.
- உங்களுக்கு நல்ல தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இரவில் படுக்கும் முன் குளிக்கலாம். ஆனால் சாப்பிட்ட பின் குளிக்க கூடாது. குளித்த உடனே சாப்பிடக் கூடாது.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்தும் விடுபட உதவுகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
- தினமும் காலையிலும் மாலையிலும் குளித்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதிக வெந்நீரில் குளிக்கக் கூடாது. இதன் காரணமாக இதயத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
- தினமும் குளித்தால் ரத்த ஓட்டம் சீராகும். இது சருமத்திற்கு நல்ல இளமையான தோற்றத்தையும் தரும்.
- மன அழுத்தம் மற்றும் கவலை உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது மனதை அமைதிப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தின் மன அழுத்தம் குறைந்து உடல் தளர்கிறது.
- குளித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல்நலப் பிரச்சினைகளை நீக்குவதோடு, பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
இந்த 3 உறுப்புகளை கட்டாயம் சுத்தப்படுத்தவும்:
உடலில் காது மடிப்பு, கால் விரல்கள் மற்றும் தொப்புள் ஆகிய மூன்று இடங்களையும், நீண்டநேரம் எடுத்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த மூன்று பகுதிகளையும் குளிக்கும் போது கவனம் எடுத்து யாரும் சுத்தப்படுத்துவது கிடையாது.
ஆனால் குளிக்கும் போது இந்த மூன்று இடங்களையும் கழுவ மறந்து விட்டால் அது நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் என அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரமும் ஆரோக்கியமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். சுகாதாரம் குறைவாக இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். குளிக்கும்போது காது, கால் விரல்கள், தொப்புள் ஆகியவற்றை சோப்பு போட்டு நன்றாக கழுவுவது மிகவும் முக்கியமானது.இதனால் அழுக்கு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் குறையும்.
உடலின் மற்ற பாகங்களை விட இங்கு அதிக ஈரப்பதம் மற்றும் எண்ணெய் தங்கும். இந்த பகுதிகளை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், கிருமிகள் உருவாகி, அரிக்கும் தோலழற்சி அல்லது முகப்பரு போன்ற தோல் நோய்களுக்கு வழிவகுக்கும்.
Image Source: Freepik