Thu Oct 29, 2026 | 09:54 AM IST

குளிர்ந்த நீரா..? சூடான நீரா..? – எந்த நீரில் குளிப்பது நல்லது..? முழு விளக்கம் இங்கே..

சருமம், முடி ஆரோக்கியத்திற்காக குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? சூடான நீரில் குளிப்பது நல்லதா? – எது உங்களுக்கு பொருத்தம் என்ற முழு விளக்கத்தை இங்கே காண்போம். 
குளிர்ந்த நீரா..? சூடான நீரா..? – எந்த நீரில் குளிப்பது நல்லது..? முழு விளக்கம் இங்கே..குளிர்ந்த நீரா..? சூடான நீரா..? – எந்த நீரில் குளிப்பது நல்லது..? முழு விளக்கம் இங்கே..

“குளிர்ந்த நீரில் குளிக்கலாமா..? சூடான நீரில் குளிக்கலாமா..?” – ஒவ்வொரு குடும்பத்திலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விதான் இது. குறிப்பாக, சருமம் பிரகாசமாக இருக்கணும், முடி ஆரோக்கியமாக இருக்கணும் என்பவர்கள் எப்போதுமே இந்த குழப்பத்தில் சிக்கிக் கொள்வது வழக்கம்.

அறிவியல் ரீதியாக பார்த்தால், குளிர்ந்த நீர் குளியல்க்கும் தனித்தன்மை உண்டு, அதே போல சூடான நீர் குளியல்க்கும் சில நன்மைகள் உண்டு. ஆனாலும், எது உங்களுக்கு சிறந்தது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

artical  - 2025-08-19T235500.609artical - 2025-08-19T235500.609

குளிர்ந்த நீரில் குளிப்பதின் நன்மைகள்

சருமம் தழுவும் பிரகாசம்:

குளிர்ந்த நீர், சருமத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இதனால் முகத்தில் இயற்கையான glow வரும்.

முடி ஆரோக்கியம்:

குளிர்ந்த நீர் முடியின் cuticle-ஐ மூடி, முடி மிருதுவாகவும் ஒளிவீசவும் உதவுகிறது.

சோர்வு நீக்கம்:

உடற்பயிற்சி பின் குளிர்ந்த நீரில் குளித்தால், தசைகள் சாந்தமடைந்து வலி குறையும்.

மன அழுத்தம் குறைப்பு:

குளிர்ந்த நீர் sympathetic nervous system-ஐ தூண்டி மனதை சுறுசுறுப்பாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ice Bath: ஐஸ் தண்ணீரில் குளிக்கும் போது என்னென்ன விஷயங்களை நினைவில் வைக்க வேண்டும்? 

சூடான நீரில் குளிப்பதின் நன்மைகள்:

உடல் வலி குறைப்பு:

சூடான நீர் தசைகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்துகிறது. முதுகு வலி, மூட்டு வலி உள்ளவர்களுக்கு இது சிறந்தது.

தூக்கத்திற்கு உதவும்:

படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலை சாந்தமாக்கி நல்ல தூக்கத்தை தருகிறது.

அழுக்கு நீக்கம்:

சூடான நீர் ரோமவிழிகளை (pores) திறந்து, தோல் மேற்பரப்பில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

சளி, காய்ச்சலுக்கு நிவாரணம்:

வெப்ப நீர் குளியல் மூச்சுக்குழாயை திறந்து congestion-ஐ குறைக்கிறது.

artical  - 2025-08-19T235822.149artical - 2025-08-19T235822.149

எதை தேர்வு செய்வது?

* குளிர்ந்த நீர் குளியல்: கோடைக்காலத்தில், அதிக வியர்வை வரும் நேரங்களில் சிறந்தது.

* சூடான நீர் குளியல்: குளிர்காலத்தில், உடல் வலி அல்லது சளி-காய்ச்சல் இருக்கும் போது உகந்தது.

மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், மிகவும் குளிர்ந்த நீர் அல்லது மிகவும் சூடான நீர் எதுவும் உடலுக்கு நல்லதல்ல. மிதமான குளிர்ச்சி / வெப்பம் கொண்ட நீர் தான் சருமத்துக்கும் முடிக்கும் பாதுகாப்பானது.

 முக்கிய அறிவுரை

* Dry skin உடையவர்கள் அடிக்கடி சூடான நீரில் குளிக்கக்கூடாது. அது மேலும் உலர்வை அதிகரிக்கும்.

* Oily skin உடையவர்கள் குளிர்ந்த நீர் குளியலை விரும்பலாம். அது excess oil secretion-ஐ கட்டுப்படுத்தும்.

* முடி ஆரோக்கியத்திற்காக, இறுதியாக குளிர்ந்த நீரில் hair rinse செய்வது நல்லது.

குறிப்பு

“குளிரா நீர் குளியலா? சூடான நீர் குளியலா?” என்ற கேள்விக்கு பதில் – உங்கள் உடல் நிலை, காலநிலை, சருமம் மற்றும் முடி தன்மைப்படி நீர் வெப்பத்தைக் கவனமாக தேர்வு செய்தால் தான் சிறந்த நன்மை கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு எப்போதும் மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள்.

 

Read Next

→ World AIDS Day 2025: உலக எய்ட்ஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 30, 2025 22:44 IST

    Published By : Ishvarya Gurumurthy