$
How To Use Neem Leaves To Treat Acne: காலநிலை மாற்றங்கள், மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் முகப்பரு உண்டாகலாம். முகப்பரு உண்டாவது சருமத்திற்கு எரிச்சல் மற்றும் வலியை உண்டாக்கலாம். இந்த முகப்பருவைத் தீர்க்க பலரும் சந்தைகளில் விற்கப்படும் கிரீம்கள், பவுடர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு பக்கவிளைவுகள் உண்டாகலாம்.
இதனைத் தவிர்க்க, இயற்கையான முறையைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் சருமத்தில் உள்ள முகப்பருக்களைக் குறைக்க வேம்பு உதவுகிறது. வேப்ப மரத்தின் இலைகள், பூக்கள் என அனைத்தும் உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இதில் முகப்பருவுக்கு வேம்புவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Forehead Acne: நெற்றி பருக்கள் ஏற்பட காரணம் என்ன? தடுப்பு முறை இதோ!
முகப்பருவுக்கு வேம்பு தரும் நன்மைகள்
சருமத்திற்கு வேம்புவை பயன்படுத்துவது சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது சருமத்தின் ஆழம் வரை சென்று முகப்பருவைக் குறைக்கவும், வடுக்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைத் தடுக்கவும் உதவுகிறது.
வேம்புவின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொன்று, பருக்கள் உருவாகாமல் தடுக்கிறது. வேப்பங்கொட்டையில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு வழிகளில் வேம்பு சருமத்திற்கு நன்மை பயக்கும்.

முகப்பரு நீங்க வேம்புவை எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதற்கு வேம்புவை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.
வேம்பு டோனர்
வேம்புவைப் பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்யவும், முகப்பருவைத் தடுக்கவும் டோனரைத் தயார் செய்யலாம். வேப்பக் கொட்டையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு வெடிப்புகளை கட்டுப்படுத்துகிறது. மேலும் சரும துளைகளில் இருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்றுகிறது. இந்த இயற்கையான வேம்பு டோனர் கரும்புள்ளிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
தேவையானவை
- வேப்ப இலை - 1 கைப்பிடி
- தண்ணீர் - அரை லிட்டர்
செய்முறை
- தண்ணீரில் வேப்ப இலைகளைச் சேர்த்து பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் இதை ஆறவைத்து, இலைகளை வடிகட்டி பாட்டில் ஒன்றில் சேமிக்கலாம். பின், இதை காட்டன் பேட் மூலம் முகத்தில் தடவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Summer Skin Care Tips: கோடைக்காலத்தில் சருமத்தை அழகாக்க உதவும் பழங்கள். கட்டாயம் சாப்பிடுங்க
வேம்பு மற்றும் சந்தன ஃபேஸ் பேக்
வேம்பு சருமத்திற்கு ஊட்டமளித்து, எரிச்சல், சொறி போன்றவற்றிலிருந்து விடுவிக்கிறது. இதில் சந்தனத்தைச் சேர்த்து பயன்படுத்துவது முகப்பருவை நீக்க உதவுகிறது. இவை இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம் முகப்பருவுக்கு சிறந்த தீர்வைப் பெறலாம்.
தேவையானவை
- சந்தனப்பொடி - 2 தேக்கரண்டி
- ரோஸ் வாட்டர் -1 தேக்கரண்டி
- வேப்பம் பூ பவுடர் - 2 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
- முதலில் சந்தனப்பொடி மற்றும் வேப்பம் பூ பவுடர் இரண்டையும் கலந்து ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
- பின் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் சமமாகத் தடவி 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, முகத்தை உலர வைக்கலாம்.

வேம்பு மற்றும் வெள்ளரி ஃபேஸ் பேக்
இவை இரண்டுமே சருமத்திற்கு நன்மைகளைத் தரக்கூடிய சிறந்த பொருள்களாகும். இது சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.
தேவையானவை
- அரைத்த வெள்ளரி - 1/2 கப்
- நசுக்கிய வேப்ப இலை - 1 டீஸ்பூன்
- ஆர்கான் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
- வேப்ப இலைகள் மற்றும் வெள்ளரியை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதில் ஆர்கான் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த பேக்கை முகம் முழுவதும் தடவலாம். ஆனால், கடுமையாக தேய்க்க வேண்டாம்.
- இதை உலர விட்டு பின்னர் கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Serum: பளிச்சென்ற முகத்திற்கு வீட்டிலேயே எளிமையா இப்படி சீரம் தயார் செய்யலாம்
வேப்ப எண்ணெய்
முகப்பருவுக்கு வேம்பு பயன்படுத்துவதில் சிறந்த வழியாக வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தலாம். வேப்ப இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முகப்பரு பிரச்சனைகளை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்கலாம். இது முகப்பருவிற்கு சிகிச்சையளிக்கவும், புதிய பருக்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.
தேவையானவை
- வேப்ப இலைகள் - 1 கப்
- தேங்காய் எண்ணெய் - 1 கப்
செய்முறை
- ஒரு கப் அளவிலான வேப்ப இலைகளை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளலாம்.
- பின் கடாய் ஒன்றில், தேங்காய் எண்ணெய் சேர்த்து படிப்படியாக வேப்பம்பூவைச் சேர்க்கவும். இப்போது தீயைக் குறைத்துத் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
- வேப்பக்கொட்டையின் நிறம் மாறும் போது, எண்ணெய் தயாராகி விடும். தீயை அணைத்து எண்ணெயை ஆற வைக்கலாம்.
- இவ்வாறு ஆறிய எண்ணெயை வடிகட்டி பாட்டில் ஒன்றில் சேமித்து முகப்பரு உள்ள பருத்தி பஞ்சு பயன்படுத்தி தடவலாம். 20 நிமிடங்கள் வரை வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வேம்புவை இவ்வாறு பல வழிகளில் பயன்படுத்தி முகத்தில் தோன்றும் பருக்களைக் குறைக்கலாம். எனினும், வேப்ப எண்ணெயை முடி அல்லது முகத்தில் நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். சருமம் உணர்திறன் மிக்கதென்பதால் சருமத்திற்கு வேப்பிலை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்யலாம் அல்லது மருத்துவ ஆலோசனை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pimple Treatment: பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் ஆயுர்வேத வைத்தியம்!
Image Source: Freepik