Pimple Treatment: பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் ஆயுர்வேத வைத்தியம்!

  • SHARE
  • FOLLOW
Pimple Treatment: பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் ஆயுர்வேத வைத்தியம்!

பருக்கள் காரணமாக, முகத்தின் அழகு குறைய ஆரம்பித்து, சில சமயங்களில் இந்தப் பிரச்சனை தன்னம்பிக்கையையும் குறைக்க ஆரம்பிக்கிறது. பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபட பல தீர்வுகள் உள்ளன, ஆனால் சில சமயங்களில் இந்த வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்காது.

பருக்கள் நீங்க சிறந்த வழிகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சித்தால் பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம், அதோடு இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாமலும் இருக்கும்.

பருக்கள் பிரச்சனையில் விடுபட உதவும் ஆயுர்வேத வைத்திய முறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆயுர்வேத முறையில் பருக்களை நீக்குவது எப்படி?

உடல் பிரச்சனைகளை சரிசெய்ய பல ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. இதை சரியாக பயன்படுத்தினால் பக்கவிளைவின்றி உடனடி பலனை பெறலாம் என ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே கூறினார். மேலும் சரும பிரச்சனையை போக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் குறித்து பார்க்கலாம்.

பாலுடன் கொத்தமல்லி விதைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி தூள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை பயன்படுத்துவதன் மூலம் சருமம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். கொத்தமல்லி பொடியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் அழற்சியை குறைக்கும். இது தவிர, பருக்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொத்தமல்லி விதைகள் பயனுள்ளதாக இருக்கும்.

பருக்கள் நீங்கள் 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் எடுத்து கொள்ளலாம். அதில் பால் கலந்து பேஸ்ட்டை தயார் செய்து, பின்னர் இந்த பேஸ்ட்டை பருக்கள் மீது மட்டும் தடவவும். கொத்தமல்லி மற்றும் பாலில் செய்த பேஸ்ட் காய்ந்ததும் அல்லது 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

இவ்வாறு பருக்கள் மீது கொத்தமல்லி தூளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பல பலன்களைப் பெறலாம். கொத்தமல்லி விதைகளில் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை சருமத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும்.

பாலுடன் ஜாதிக்காய் பொடி

பருக்களை நீக்க, நீங்கள் பால், ஜாதிக்காயை பயன்படுத்தலாம். இதற்கு, ஜாதிக்காயை பாலுடன் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்து, பின்னர் இந்த பேஸ்ட்டை பருக்கள் மீது மட்டும் தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பலன்களைப் பெறலாம். ஜாதிக்காயில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை சருமத்திற்கு நன்மை பயக்கும். ஜாதிக்காய் மற்றும் பால் இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவ வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பாலுடன் கருப்பு மிளகு

பருக்கள் பிரச்சனையை போக்க கருமிளகு பேஸ்ட்டை பாலுடன் சேர்த்து தடவலாம். ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு முன், கருப்பு மிளகு மற்றும் பால் கலவையை பருக்கள் மீது மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாலில் கருப்பு மிளகு தூள் கலந்து பேஸ்ட்டை தயார் செய்து, பருக்கள் மீது 10 நிமிடம் தடவி, பின்னர் சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

இந்த ஆயுர்வேத வைத்தியம் மூலம் பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆனால் உங்களுக்கு தோலில் ஏதேனும் வேறு பிரச்சனைகள் இருந்தால் இதை பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

Pic Courtesy: FreePik

Read Next

Oily Skin Treatment: எண்ணெய் பசை பிரச்சனையை போக்க இரவில் முகத்தில் இதை தடவுங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்