Best Anti Acne Drinks: முகத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள் இருப்பது முக அழகையே கெடுக்கும் விதமாக இருக்கும். இதை தடுக்க பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். முகப்பரு பிரச்சனை பொதுவாக தோலில் இருந்து எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதால் ஏற்படுகிறது. உங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் மூலம் முகப்பருவில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இதுகுறித்து உணவியல் நிபுணர் ரிச்சா சதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தகவலை விரிவாக பார்க்கலாம். முகப்பரு மற்றும் தழும்புகளை அகற்ற உதவும் சூப்பர் டிரிங்க்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகப்பருவை போக்கும் சூப்பர் டிரிங்க் செய்முறை
இந்த சூப்பர் ட்ரிங்க்கை தயாரிக்க, கீரையை நறுக்க வேண்டும். இதனுடன் கிவி, அன்னாசி, ஆப்பிள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் மிக்ஸியில் கீரையை நன்கு அரைக்க வேண்டும்.
இப்போது ஆப்பிள், கிவி, அன்னாசி பழங்களை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இப்போது நீங்கள் இந்த சாற்றை எடுத்து நன்றாக கலக்க வேண்டும்
நீங்கள் விரும்பினால் இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
சூப்பர் டிரிங்க்ஸ் சருமத்திற்கு நன்மை பயக்குமா?
இந்த சூப்பர் டிரிங்க்கை குடிப்பது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பானத்தை குடிப்பதால் முகப்பரு மற்றும் தழும்புகள் பிரச்சனையில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும்.
இந்த பானத்தை குடிப்பதால் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதுடன், சருமத்திற்கு பொலிவும் கிடைக்கும்.
இந்த பானத்தில் வயதான எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சருமத்தை இளமையாகவும், நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த சூப்பர்டிரிங் சருமத்தின் கொலாஜன் அதிகரித்து, சருமத்தை இறுக்கமாக்குகிறது.
இதனை குடிப்பதால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
இதையும் படிங்க: Eyebrow: கரு, கருன்னு அடர்த்தியான புருவம் வேண்டுமா?… இந்த மூணே விஷயங்கள் போதும்!
முகப்பருவை குறைக்க வழிகள்
முகப்பருவைக் குறைக்க, புதிய கற்றாழை ஜெல்லைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம்.
முகப்பருவில் இருந்து நிவாரணம் பெற மஞ்சள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து தடவலாம்.
முகப்பருவில் இருந்து நிவாரணம் பெற, ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டியது மிக அவசியம்.
Pic Courtesy: FreePik