Instant Glowing Skin Home Remedies: இன்று பலரும் உடனடியாக முகத்தைப் பொலிவாக்க விரும்புகின்றனர். அதனால் பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் அல்லது கடினமான தோல் பராமரிப்பு நடைமுறைகளைக் கையாள்கின்றனர். ஆனால் இது சில சமயங்களில் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க, சில இயற்கை முறைகளைக் கையாள்வது அவசியமாகும்.
உடனடியாக பளபளப்பான சருமத்தைப் பெற சில இயற்கையான வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். இது சருமத்தைப் புத்துயிர் பெறச் செய்வதுடன் பொலிவுடன் வைக்க உதவுகிறது. இதில் உடனடியாக முகத்தைப் பொலிவுற வைக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க
உடனடி சருமப்பொலிவு பெற உதவும் வீட்டு வைத்தியங்கள்
கற்றாழை
கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சிறந்த தேர்வாகும். இது சிறந்த தோல் பராமரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், சரும பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை தனியே எடுத்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வைத்து பின் கழுவிக் கொள்ளலாம். மேலும் இதன் வழக்கமான பயன்பாடு இயற்கையான மற்றும் நீடித்த பிரகாசத்தைத் தரும்.
ஓட்மீல் ஸ்க்ரப்
ஓட்ஸ் ஆனது சிறந்த மற்றும் மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டர் ஆகும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பிரகாசமான நிறத்தைத் தருகிறது. இதற்கு ஓட்மீலை அரைத்து தயிர் கலந்து கெட்டியான கலவையை உருவாக்கலாம். பின் இந்த கலவையை முகத்தில் வட்ட இயக்கங்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் இதை குளிர்ந்த நீரில் கழுவி வர சருமத்தை மிருதுவாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்கலாம்.
தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்
தேன் ஒரு இயற்கையான ஈரப்பதம் மிகுந்ததாகும். இவை சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை பிரகாசமாக வைக்கிறது. இதற்கு ஒரு தேக்கரண்டி தேனுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவலாம். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Olive Oil For Skin: முகம் பளிச்சினு தங்கம் போல மின்ன ஆலிவ் எண்ணெய் ஒன்னு போதும்
ரோஸ்வாட்டர் டோனர்
ரோஸ்வாட்டர் டோனரைச் சருமத்திற்கு பயன்படுத்துவது புத்துணர்ச்சியைத் தருகிறது. இது இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் துளைகளை இறுக்கவும், தோலின் pH சமநிலையை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இதற்கு ரோஸ்வாட்டரை பருத்தி துணியில் தடவி சருமத்தில் மெதுவாக முகத்தில் தடவலாம். இது சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்து முகத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
மஞ்சள் ஃபேஸ்மாஸ்க்
மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதற்கு தயிரில் ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் கலந்து கலவையை உருவாக்கலாம். இதை முகத்தில் சமமாக தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
வெள்ளரிக்காய் துண்டுகள்
சருமத்திற்கு வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவது புத்துணர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை அளிக்கிறது. இதற்கு வெள்ளரிக்காயை நறுக்கிச் வெள்ளரிக்காய் துண்டுகளை முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். மேலும் இதில் உள்ள இயற்கையான அஸ்ட்ரிஜென்ட்கள் சருமத்தை இறுக்கமாக வைத்து, வீக்கத்தைக் குறைப்பதுடன் முகத்தைப் புத்துயிர் பெறச் செய்கிறது.
இந்த வகை வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தி முகத்திற்குத் தடவி உடனடியாக சருமத்தைப் பொலிவாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon Face Pack: முகத்தில் பருக்கள் சீக்கிரம் மறைய இலவங்கப்பட்டையுடன் இந்த ஒரு பொருள் போதும்
Image Source: Freepik