Acne: குளிர்காலத்திலும் முகப்பரு பிரச்சனை வருகிறதா? காரணமும், தீர்வும் இதோ..

  • SHARE
  • FOLLOW
Acne: குளிர்காலத்திலும் முகப்பரு பிரச்சனை வருகிறதா? காரணமும், தீர்வும் இதோ..

குளிர்காலத்திலும் பருக்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்களில் ஒருவராக நீங்களும் இருந்தால், இந்த பதிவை படித்து அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் முழுமையாக அறிந்துக் கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் என்ன?

வெப்பமாக்கல் முயற்சி

குளிரை தவிர்க்க உடலையும் சுற்றுப்புற சூழலையும் வெப்பமாக வைக்க பலரும் முயற்சிக்கிறார்கள். இதன்காரணமாக காற்றில் உள்ள ஈரப்பதம் நீங்கி வறண்ட சருமத்தை ஏற்படுத்தும். மேலும் வறண்ட சூழல் சருமத்தை அதிக எண்ணெய் உற்பத்தி செய்ய தூண்டும், இது முகப்பருவுக்கு வழிவகுக்கும்.

மிகவும் சூடான நீரில் குளித்தல்

குளிர் காலத்தில், மக்கள் அடிக்கடி மிகவும் சூடான நீரில் குளிப்பார்கள், இது உங்கள் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை அகற்றி, சருமம் வறண்டு, பருக்கள் பிரச்சனையை அதிகரிக்கும்.

அதிகப்படியான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துதல்

குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட சரும பிரச்சனையில் இருந்து விடுபட, மாய்ஸ்சரைசிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர்.கனமான அல்லது எண்ணெய் பசையுள்ள மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவதால் சரும துவாரங்களை அடைத்து, பருக்கள் பிரச்சனையை அதிகரிக்கும்.

நீரிழப்பு

குளிர் காலத்தில், மக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துவதைக் குறைக்கத் தொடங்குகிறார்கள், மேலும் வெந்நீரில் பலர் குளிக்கிறார்கள். இதனால் சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது தொடர்ந்து பருக்களும் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் நீர்ச்சத்து குறையும். குளிர் காலத்தில் நீரேற்றமாக இருப்பது மென்மையான சருமத்திற்கு முக்கியமானது.

குளிர்காலத்தில் பருக்கள் பிரச்சனையை தவிர்க்கும் வழிகள்

  1. முகத்தை சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டாம். தொடர்ந்து சுத்தம் செய்யவும்.
  2. உங்கள் முகத்தை மீண்டும் மீண்டும் தொடுவதைத் தவிர்க்கவும்.
  3. சருமத்தை அடிக்கடி தொந்தரவு செய்ய வேண்டாம்.
  4. அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.
  5. நிறைய தண்ணீர் குடிக்கவும்.

Pic Courtesy: FreePik

Read Next

குளிர்காலத்தில் குளிப்பதற்கு முன் இதை செய்யுங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்