குளிர்காலத்தில் குளிப்பதற்கு முன் இதை செய்யுங்கள்!

  • SHARE
  • FOLLOW
குளிர்காலத்தில் குளிப்பதற்கு முன் இதை செய்யுங்கள்!

குளிப்பதற்கு முன் இதை செய்யுங்கள்..

ஆயுர்வேதத்தின்படி, குளிப்பதற்கு முன் ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஈரப்பதமாக்க வேண்டும். குளிர்காலத்தில் குளிப்பதற்கு முன் உடலில் எண்ணெய் தடவுவது நன்மை பயக்கும். இது சருமத்திற்கு நன்மை பயக்கும். எனவே கடுகு அல்லது தேங்காய் எண்ணெயைக் கொண்டு உடலை நன்றாக மசாஜ் செய்து குளித்த பின், டவலால் உடலை நன்றாக சுத்தம் செய்யவும். இப்படி செய்தால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து கீழே காண்போம். 

குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!

* குளிர்காலத்தில் உடலில் எண்ணெய் தடவுவதால் சரும வறட்சி பிரச்னைகளில் இருந்து விடுபடுவதோடு, ஊட்டச்சத்தையும் பெறுவீர்கள். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

* குளிப்பதற்கு முன் உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலை ரிலாக்ஸ் ஆக்கும்.

* குளிப்பதற்கு முன் முகத்தில் எண்ணெய் தடவுவது, முகச் சுருக்கங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். 

* குளிர்காலத்தில் உடலில் எண்ணெய் தடவினால் தசைகள் தளர்ந்து சோர்வு நீங்கும்.

* குளிர்காலத்தில் எண்ணெய் தடவினால் மூட்டு வலி மற்றும் வீக்கம் பிரச்சனைகள் நீங்கும்.

Image Source: Freepik

Read Next

Glowing Skin: குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் 5 காய்கறி ஃபேஸ் பேக்!

Disclaimer

குறிச்சொற்கள்