Eye Care: இந்த டிஜிட்டல் யுகத்தில் எதுவென்றாலும் திரை பயன்பாடு தான். கல்வி, வேலை, பொழுதுபோக்கு என அனைத்திற்கும் திரை அணுகல் தேவைப்படுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனையே பார்வை குறைபாடு ஆகும். பார்வைக் குறைபாடு என்பது ஒரு நபரின் வாழ்க்கை முறையைத் தீவிரமாகப் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாகும்.
பெரும்பாலான நோய்கள் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான விஷயங்களே காரணமாக இருக்கிறது. இது தவிர, மரபணு காரணங்களாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களும் பார்வைக் குறைபாடு போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன. பார்வை குறைபாட்டுக்கான காரணங்கள் குறித்தும் தீர்வுகள் குறித்தும் பார்க்கலாம்.
பார்வைக் குறைபாட்டிற்கான காரணங்கள்
பார்வைக் குறைபாட்டிற்கு பல காரணங்கள் இருக்கலாம். மூத்த கண் மருத்துவர் டாக்டர் தர்மேந்திர சிங் இதுகுறித்து கூறுகையில், மரபணுக் காரணங்கள், பிறக்கும் போது ஏற்படும் பிரச்னைகள், கண் நோய்கள், அதிக அளவு மருந்துகள், மருந்துகள் உட்கொள்வது போன்றவற்றால் பார்வைக் குறைபாடு பிரச்னை ஏற்படுகிறது.
அதிகரிக்கும் வயது, கண் காயங்கள் மற்றும் கிளௌகோமா போன்ற நோய்களால் பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. வயது அதிகரிக்கும் போது இந்த பிரச்சனை மிகவும் பொதுவானது. பார்வைக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் அதன் அபாயத்தைக் குறைக்கலாம்.
பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகள்
பார்வை குறைபாடு அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால் மருத்தவர் ஆலோசனையோடு தகுந்த சிகிச்சை எடுக்கலாம். அதோடு அந்த நோயாளி பார்வையற்றவராக மாறாமல் காப்பாற்ற முடியும். பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகள் நோயாளியின் வயது, உடல்நலம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சைகள் மாறுபடும்.
பார்வைக் குறைபாடு பிரச்சனையில் காணப்படும் முக்கிய அறிகுறிகள்
மங்கலான பார்வை
நபரை அடையாளம் காண்பதில் சிரமம்
நிறம் இழப்பு
இருட்டான பார்வை
கடுமையான கண் வலி
சாப்பிடும் போது சிரமம்
பார்வைக் குறைபாடு சிகிச்சை
பார்வைக் குறைபாடு ஏற்பட்டால், நோயாளியின் சிகிச்சையானது நோயின் தீவிரம் மற்றும் நபரின் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த நோயின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் மூலம், ஒருவர் கடுமையாக பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
பார்வைக் குறைபாடு பிரச்சனையை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதன் சிகிச்சை எளிதாகிவிடும். நோயாளியின் நிலையைப் பொறுத்து, மருத்துவர் மருந்து, கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றை பரிந்துரைக்கலாம்.
Pic Courtesy: FreePik