Thu Oct 29, 2026 | 11:56 AM IST

Glowing Skin: ஒரே வாரத்தில் உங்க முகம் பளபளவென ஜொலிக்கணுமா? தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!

Glowing Skin: ஒரே வாரத்தில் உங்க முகம் பளபளவென ஜொலிக்கணுமா? தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!Glowing Skin: ஒரே வாரத்தில் உங்க முகம் பளபளவென ஜொலிக்கணுமா? தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!

Amla ginger pepper juice for glowing skin: அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற நாம் அனைவரும் விரும்புவோம். சரும அழகை பராமரிக்க எந்த ஒரு முறையையும் கடைப்பிடிக்க மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக, நம்மில் பலர் சந்தைகளில் விற்கப்படும் பல விலை உயர்ந்த தோல் பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் முகப் பொலிவுக்கு சருமப் பராமரிப்புப் பொருட்கள் மட்டும் போதாது. முகப் பொலிவைத் தக்கவைக்க, உணவில் சிலவற்றைச் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அந்தவகையில், உங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிறப்பு ஜூஸ் ஒன்றை பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இது சில வாரங்களில் உங்கள் சருமத்தை பளபளக்கும். ஆம்லா, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் சருமம் உள்ளிருந்து ஆரோக்கியமாக இருக்கும். இதனால், முகம் இயற்கையாகவே பிரகாசமாக மாறும். இதன் செய்முறை மற்றும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Ghee Cause Acne: நெய் சாப்பிட்டால் பருக்கள் வருமா? நிபுணர்கள் கருத்து!

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 2.
துண்டு இஞ்சி - சிறிது.
கருப்பு மிளகு - 34.
கறிவேப்பிலை இலை - 8 முதல் 10.

ஜூஸ் செய்முறை:

  • முதலில் அனைத்து பொருட்களையும் சுத்தமாக கழுவி எடுக்கவும்.
  • இப்போது, முழு நெல்லிக்காயை விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • அதே போல இஞ்சியையும் தோல் நீக்கி இரண்டாக வெட்டவும்.
  • இப்போது, அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் போட்டு, சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
  • பின்னர், இதை வடிகட்டி குடிக்கவும். தேவைப்பட்டால் தேன் சேர்த்து குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Glowing Skin: இந்த 3 பொருள் இருந்தால் போதும், பத்தே நிமிடத்தில் உங்க முகம் பளபளக்கும்!

நெல்லிக்காய், மிளகு, இஞ்சி ஜூஸ் பயன்கள்

நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால், முன்கூட்டிய முதுமை ஏற்படலாம் மற்றும் சருமம் களையிழந்து காணப்படும்.

ஆம்லாவில் வைட்டமின் சி உள்ளது, இது கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க அவசியம். இதுவும் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Rose water: இந்த பொருட்களை மறந்து கூட ரோஸ் வாட்டரில் கலந்து யூஸ் பண்ண கூடாது!

இதில், உள்ள கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பருக்கள், முகப்பரு மற்றும் தழும்புகளை குறைக்கும். இதில், அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது, இது சருமத்தை ஆரோக்கியமாக மாற்றும்.

அவற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவருகிறது. கருப்பு மிளகாயில் வயதான எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை நீக்குகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

→ Glowing Skin Tips: முகப்பொலிவை அதிகரிக்கும் சக்கரவள்ளி கிழங்கு; எப்படி பயன்படுத்துவது?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.