$
Ways to Grow Thicker Eyebrows: அடர்த்தியான புருவங்கள் முகத்தின் அழகை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மில் பலர் அடர்த்தியான புருவம் இல்லையே என வருத்தப்பட்டிருப்போம். இதற்காக சிலர் சந்தையில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், எந்த பலனும் கிடைத்திருக்காது.
ஆனால், வீட்டில் இருக்கும் சில பொருட்கள் உங்கள் புருவத்தை அடர்த்தியாக மாற்ற உதவும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். இனி அடர்த்தியான புருவங்களுக்கு பென்சிலை பயன்படுத்த வேண்டாம். அடர்த்தியான புருவங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Cucumber On Face: சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வெள்ளரியை இப்படி யூஸ் பண்ணுங்க!
பால்

அடர்த்தியான புருவங்களைப் பெற நீங்கள் பால் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் பாலை பச்சையாக பயன்படுத்த வேண்டும். இதில் பல புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியாக இருக்கும். பச்சைப் பால் காரணமாக, புருவங்களின் வளர்ச்சி மட்டுமல்ல, புருவ முடியின் வளர்ச்சியும் மென்மையாக இருக்கும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
பஞ்சின் உதவியுடன் புருவங்களில் பச்சை பாலை தடவவும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்யவும். புருவங்களில் பச்சை பாலை பயன்படுத்தினால் சில நாட்களில் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இரவு தூங்க செல்லும் முன் இதை தினமும் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Eyebrow Growth Tips : ஒரே வாரத்தில் புருவங்கள் அடர்த்தியாக வளர இதை ட்ரை செய்யுங்க
முட்டை

புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்க முட்டையின் உள் பகுதியையும் பயன்படுத்தலாம். அதாவது முட்டையின் மஞ்சள் கரு. முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு புரதம் உள்ளது. இது புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். அத்துடன் முட்டையின் மஞ்சள் கரு உங்கள் புருவத்தை மென்மையாக மாற்றும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
முட்டையின் மஞ்சள் கருவை அடித்து வாரத்திற்கு 2 முதல் 3 முறை புருவங்களில் தடவி, காய்ந்த பிறகு அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு புருவங்களின் வளர்ச்சி அதிகரிப்பதைக் காண்பீர்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Eyebrow Thickening Tips: அடர்த்தியான கண் புருவம் வேண்டுமா? தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க
விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் காலம் காலமாக முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் ஒன்று. இவற்றை தினமும் இரவு தூங்க செல்லும் முன் உங்கள் புருவத்தில் தடவவும். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் புருவங்கள் அடர்த்தியாவதை நீங்கள் காணிப்பீர்கள்.
Pic Courtesy: Freepik