Eyebrow growth tips in Tamil : முகத்தின் அழகை அதிகரிப்பது கண்களும் புருவங்களும் தான். இதன் அடர்த்தி பெண்ணுக்குப் பெண் மாறுபடும். சிலருக்கு அடர்த்தியாகவும், சிலருக்கு மெல்லியதாகவும் இருக்கும். உங்கள் சரும நிறம் எப்படி இருந்தாலும், புருவங்களின் வடிவம் சரியாக இருந்தால் உங்கள் முகத்தின் அழகு அதிகரிக்கும். அதனால்தான் பெண்கள் தங்கள் புருவங்களை பராமரிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். அவர்களின் முக வடிவத்திற்கு ஏற்ப பார்லருக்கு சென்று புருவங்களை ட்ரிம் செய்வார்கள்.
அதிகமாக புருவம் இல்லாதவர்கள், காஜல் போட்டு தங்களின் புருவத்தை அடர்த்தியாக காட்டுவார்கள். உங்கள் புருவத்தை அடர்த்தியாக்க விரும்பினால், உங்களுக்கான சில வீட்டு வைத்தியம் பற்றி கூறுகிறோம். இது உங்கள் புருவத்தை ஒரே வாரத்தில் அடர்த்தியாக வளர வைக்கும். புருவம் அடர்த்தியாக வளர்வதுடன் முடி கருமையாகவும் காணப்படும்.
இந்த பதிவும் உதவலாம் : தேங்காய் எண்ணெயால் உடலில் ஏற்படும் நன்மைகள்?
அடர்த்தியான புருவங்களுக்கு கற்றாழை பயன்படுத்தவும்

கற்றாழை தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அனைவரின் வீட்டிலும் காணப்படும் மருந்து செடிகளில் ஒன்று. அலோ வேரா ஜெல்லில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. முடி வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
கற்றாழையை எப்படி பயன்படுத்துவது?
- இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதை புருவங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
- தினமும் ஒரு முறை புருவத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
இப்படி செய்வதன் மூலம், புருவங்களின் வளர்ச்சி விரைவில் அதிகரிக்கும். ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தை காணிப்பீர்கள். விரும்பினால், கற்றாழையுடன் ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் : இயற்கை முறையில் மேக்கப்பை அகற்ற வேண்டுமா? உங்களுக்கான வழிகள் இதோ!
அடர்த்தியான புருவங்களுக்கு வெங்காய சாறு பயன்படுத்தவும்

அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலுக்கு வெங்காயச் சாற்றைப் பயன்படுத்துவது போலவே, புருவங்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் புருவங்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது?
- முதலில் வெங்காயத்தை தோலுரித்து, பின் அரைத்து சாறு எடுக்க வேண்டும்.
- பின்னர் அதை உங்கள் புருவங்களில் தடவவும்.
- 10 நிமிடங்கள் அப்படியே விட்டு குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.
இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தை நீங்கள் காணமுடியும். இந்த செயல்முறை உங்க பணத்தை மிச்சப்படுத்துவதுடன், நல்ல ரிசல்டையும் கொடுக்கும்.
Image Credit: freepik