Coconut Oil On Lips: உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

  • SHARE
  • FOLLOW
Coconut Oil On Lips: உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!


உதடுகளைப் பராமரிக்க சந்தையில் கிடைக்கும் சில பொருள்களைப் பயன்படுத்துவர். ஆனால், சில சமயங்களில் இது விளைவுகளை ஏற்படுத்தலாம். எனினும், சில இயற்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் உதடுகளை பராமரிக்கலாம். இதில் உதடு பராமரிப்பில் உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம். மேலும் அதனை பயன்படுத்து முறையையும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pink Lips Home Remedies: அழகான பிங்க் நிற உதட்டைப் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க

உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளால் மிக நீண்ட காலமாகவே நன்கு அறியப்படும் ஒன்றாகும். இது உடல் முழுவதும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இவை வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிப்பதுடன், உதடு வெடிப்பு, உலர்ந்த உதடு போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயை ஓரிரவு முழுவதும் வைப்பது உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கும், நீரேற்றமாக வைப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது மென்மையாகவும், விரைவாக மீட்கவும் உதவக்கூடியதாகும். சருமத்தின் மூன்று தோல் அடுக்குகளையும் ஊடுருவிச் செல்லும் பண்புகளை தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளது. எனவே உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் மிகுந்த பயன்களைத் தருகிறது.

உதட்டில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

உடனடி பிரகாசம்

பொதுவாக குளிர்காலத்தில் உதடுகள் உயிரற்ற, மந்தமான சருமமாக இருக்கும். இதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மற்றும் சரியான தீர்வாக அமைகிறது. எனவே, வெளியில் செல்லும் முன்பாக சிறிது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவ வேண்டும். இதனுடன் பிரகாசத்தை அதிகரிக்க சிறிது வண்ணமயமான உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவது சருமத்தை இயல்பாகவும், அழகாக மற்றும் பிரகாசமாக வைக்க உதவுகிறது.

உதடு தைலம்

குளிர் காலநிலை, அதிக சூரிய ஒளி, ஈரப்பதம் இல்லாமை அல்லது குறிப்பிடப்பட்ட ஏதேனும் காரணிகளால் உதடுகள் வறண்டு போகலாம். அதே சமயம், இறந்த சரும செல்களை கவனமாக அகற்ற வேண்டும். அதன் படி, உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய்  ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது. இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னதாக உதடுகளை உரிந்து சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவலாம். காலையில் வறண்ட சருமம் தெளிவாக குணமாகும். மேலும், தேங்காய் எண்ணெய் அறை வெப்பநிலையில் திடமாக இருப்பதால் எண்ணெயை காலியான லிப் பாம் பாட்டிலில் சேமித்து நாள் முழுவதும் பயன்படுத்தலாம். உதடுகளின் முழுப் பகுதிக்கும் ஈரப்பதத்தை வழங்க, உதடுகளுக்கு லிப் ஆயில் அல்லது லிப் பாம் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dark lips: ஒரே வாரத்தில் உங்க உதடு சிவப்பாகனுமா? ஆமணக்கு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!

இரவு மாஸ்காக தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் நாள் முழுவதும் உதடு தைலத்திற்கு மாற்றாக பயன்படுத்துவதுடன், ஓரிரவு முழுவதும் மாஸ்காக பயன்படுத்தலாம். இதற்கு தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெயை சமமான பகுதிகளாக எடுத்து, ஒரு கிரீம் உருவாகும் வரை கலக்க வேண்டும். இதற்கு மற்றொரு தடிமனான பாதுகாப்பு தேன் பயன்படுத்தலாம். இதை படுக்கைக்குச் செல்வதற்கு முன், உதடுகளில் சமமாகப் பூசி, இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் கழுவது வியக்கத்தக்க இளமைத் தோற்றத்தை அளிக்கிறது.

சிறந்த ஒப்பனை நீக்கியாக

தேங்காய் எண்ணெய் ஆனது சிறந்த ஒப்பனை நீக்கிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் பருத்தி துணி ஒன்றில், சிறிது தேங்காய் எண்ணெயைச் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் மிகவும் கடினமான லிப்ஸ்டிக் கறையைக் கூட எளிதில் அகற்றலாம். கூடுதலாக, உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், மேக்கப் ரிமூவர்களில் காணப்படும் கடுமையான இரசாயனங்களைப் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும். மேக்கமப்பை துடைக்கும் அதே நேரத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது.

கருமை உதடுகளை பளபளப்பாக்க

உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது அதைக் கருமையாக்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது உண்மை அல்ல. மாறாக, இது மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளை உருவாக்குகிறது. எனவே மென்மையான சருமத்தை ஈரப்பதமாக்க உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு இதில் உள்ள அமைதியான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளே காரணமாகும். இவை உலர்ந்த் உதடுகளை மென்மையாக மற்றும் மிருதுவாக பராமரிக்க உதவுகிறது. இவை உலர்ந்து கருமையாக மாறுவதைத் தடுக்கலாம். அதன் படி, உதடுகளில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த ஆள்காட்டி விரலைப் பயன்படுத்த வேண்டும். இதை தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.

இவ்வாறு உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Lips: கருப்பான உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

விடாபிடியான அக்குள் கருமையை நீக்க சூப்பர் டிப்ஸ் இங்கே..

Disclaimer