$
Summer Diarrhea: பொதுவாக கோடை காலத்தில் பலரும் அறிவுரை விடுப்பது உணவில் கவனம் செலுத்துங்கள் என்பதுதான். உணவுமுறையில் கவனமாக இருந்தாலே போதும், கோடைகால பிரச்சனை பலவற்றை தவிர்க்கலாம். கோடை காலத்தில் பலரும் சரும பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இது இயல்பு என்றாலும், ஏணையோர் வயிற்றுப்போக்கு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
பலரும் இந்த வயிற்றுப்போக்கு பிரச்சனையை தீவிரமாக எதிர்கொண்டு இது வேறு ஏதும் நோய் தாக்கத்தின் விளைவோ என்று அச்சப்படுகிறார்கள். அதோடு இதை சரிசெய்ய பல வைத்திய முறைகளையும் பின்பற்றுகிறார்கள். சரி, கோடையில் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் என்ன, அதற்கான தீர்வுதான் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கோடையில் வயிற்றுப்போக்கு ஏன் ஏற்படுகிறது?
குடலில் செரிமானத்திற்கு உதவுகிற என்சைம்கள் என்ற சுரப்பி வெப்பக் காலத்தில் மிக குறைவாகவே சுரக்கும். அதேபோல் வெயில் காலத்தில் சில பாக்டீரியா உற்பத்திகளும் சற்று அதிகமாகவே இருக்கும். இது வயிற்றில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனையை ஏற்படுத்தும்.
வெயில் நேரத்தில் இருக்கும் அதிக வெப்பத்தால் நீரிழப்பு உள்ளிட்ட செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அதேபோல் முன்னதாக குறிப்பிட்டது போல் சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியால் ஃபுட் பாய்ஷன் பிரச்சனையும் ஏற்படுகிறது.
Dehydration பிரச்சனை என்றால் என்ன?
மாசு படிந்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளால் குடல் பாதிக்கப்படும் போது அதிக வெப்பத்தால் குடல் அதிக அளவில் திரவம் சுரக்க வைக்கிறது. இது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தி, குடலில் உள்ள நீர் சத்து, பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. இதுவே Dehydration பிரச்சனை என அழைக்கப்படுகிறது.

வெயில் வயிற்றுப்போக்கு, Dehydration அறிகுறிகள் என்ன?
வெயில் காலத்தில் இதுபோன்று ஏற்படும் பாதிப்பிற்கும் சாதாரண வயிற்றுப் போக்கிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே என்ற கேள்வி வரலாம். Dehydration போன்ற பிரச்சனை வரும் போது பல அறிகுறிகளை சந்திக்க நேரும். மலம் தண்ணீர்போல் வெளியேறும், சிறுநீர் அளவு குறையும், இரத்த அழுத்தம் குறைவு, மயக்கமான உணர்வு, கை கால்கள் ஜில்லனு மாறும் உணர்வு உள்ளிட்டவைகள் ஏற்படும். இந்த அறிகுறிகளால் தான் பலரும் அச்சப்படுகிறார்கள்.
குழந்தைகள் வயிற்றுப்போக்கு காரணம்
இந்த பிரச்சனையல் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எனவே பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் இந்த பிரச்சனையில் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் பாத்திரம் உள்ளிட்டவைகளை கிருமிகள் அணுகாதபடி நன்றாக கழுவ வேண்டும்.
வெயில் வயிற்றுப்போக்கு, Dehydration வீட்டு வைத்தியம்
எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். போதுமான தண்ணீரை குடித்துக் கொண்டே இருங்கள். கோடையில் வயிற்றுப் போக்கு பிரச்சனையை எதிர்கொள்ளும்பட்சத்தில் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து அதில் 20 கிராம் சர்க்கரை, 5 கிராம் உப்பு கலந்துக் கொள்ளவும்.
இதை ஒரு மணி நேரத்திற்கு 500 மில்லி அளவு குடிக்கலாம். வயிற்றுப் போக்கு நேரத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானமும் இதுதான். இதை தான் கடைகளில் எலெக்ட்ரால் போன்ற பெயர்களில் விற்கப்படுகிறது.
பிரச்சனைகள் தீவிரமாகும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவதே சிறந்த முடிவாகும். அதேபோல் குளுகோஸ் போன்றவற்றை செலுத்திக் கொள்வதும் நல்லது. முறையான உணவு முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது கோடை காலத்தில் மிக முக்கியம்.
Pic Courtesy: FreePik